“I’m your fan too…அசர வைத்த சிவாங்கி…நேரில் அழைத்து பாராட்டிய ரன்பிர் கபூர்”

வெளியிட்டது

பாலிவுட் இளம் நடிகர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்பிர் கபூர். பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகனாக திரைத்துறையில் அறிமுகமாகி தனக்கென தனியாக ஒரு இடத்தை சினிமா உலகில் உருவாக்கி வைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு வெளியான “சவாரியா” என்ற படம் மூலம் அறிமுகமான இவர், அந்த படம் தோல்வி படமாக அமைந்தாலும், பின்னர் அதில் நடித்ததற்கு பிலிம் பேர் விருதினை வென்று அசத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"I'm your fan too...அசர வைத்த சிவாங்கி...நேரில் அழைத்து பாராட்டிய ரன்பிர் கபூர்" 1

அதன் பின்னர் “Wake up sid” “ஆஜ் பிரேம் கி கசப் கஹானி”, ராஜ்நீதி, பர்ஃபி, ஏ தில் ஹை முஷ்கில், ராக்ஸ்டார், சஞ்சு போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இது வரையில் மொத்தம் 6 பிலிம் பேர் விருதுகளையும் இவர் வென்றுள்ளார். நடிப்பு மட்டுமின்றி இவருடைய நிஜ வாழ்க்கை காதல் விவகாரங்களும் பாலிவுட்டில் மிக பிரபலம். நடிகைகள் தீபிகா படுகோனே, கத்ரீனா கைப் போன்ற நடிகைகளுடன் இவர் காதல் வயப்பட்டு அந்த செய்திகள் பாலிவுட்டில் மிக பரபரப்பாக பேசப்பட்டது. கடைசியில் இவர் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட்டை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

பாலிவுட்டில் இப்பொது பான் இந்திய படமாக உருவாகி வரும் படம் “பிரம்மாஸ்திரா”. பாலிவுட் முன்னணி நடிகர் ரன்பிர் கபூர், அலியா பட், நாகார்ஜூனா, மௌனி ராய், அமிதாப் பச்சன் என பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்க மிக பெரிய பொருட்செலவில் ஆக்ஷன், பாண்டஸி படமாக உருவாகியுள்ள இந்த படம் உருவாகியுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

தமிழிலும் இந்த படம் வெளியாகும் நிலையில் அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் நடிகர் ரன்பிர் கபூர் இறங்கியுள்ளார். ஏற்கனவே வெளியான ட்ரைலர் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மேலும் பயங்கரமாக இந்த படத்தை இங்கும் ப்ரோமொடே செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. அதின் ஒரு பங்காக அவர் தொகுப்பாளினி DD தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றின் பேட்டியில் பங்கெடுத்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியின் போது, அவர் குக் வித் கோமாளி புகழ் விஜய் டிவி சிவாங்கியையும் சந்தித்துள்ளார். அந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் சிறியதாக பாடகராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து இப்போது முன்னணி பாலிவுட் நடிகருக்கும் பிடித்து போன ஒரு ஆர்டிஸ்டாக உயர்ந்துள்ள சிவாங்கிக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை கூறிவருகிறார்கள்.

Video Courtesy – Vlogs by NN

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்