“மாஸ் கெட்டப்பில் நயன்தாரா….ஆக்ஷனில் அடித்து நொறுக்கவுள்ள 75வது திரைப்படம் வீடியோ”

இன்றைய தமழ் திரையுலகின் முதல் பெண் நாயகி என்றால் அது நடிகை நயன்தாரா தான். சரத்குமார் நடித்த “ஐயா” படத்தின் மூலம் தமிழிற்கு அறிமுகமான இவர் இரண்டாவது படத்துலேயே ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு என்ற அப்போதைய முன்னணி நடிகர் நடிப்பில் பிரமாண்டமாக உருவான “சந்திரமுகி” படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் தொடர்ந்து அஜித்துடன் பில்லா, ஏகன், விஜயுடன் வில்லு, தனுஷுடன் யாரடி நீ மோகினி, சிம்புவுடன் வல்லவன் போன்ற தொடர் வெற்றிப்படங்களில் நாயகியாக தோன்றி முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தெலுங்கிலும் நடிகர்கள் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், பிரபாஸ், நாகார்ஜூனா, ரவி தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என அங்குள்ள முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபலமானார்.

விளம்பரம்

"மாஸ் கெட்டப்பில் நயன்தாரா....ஆக்ஷனில் அடித்து நொறுக்கவுள்ள 75வது திரைப்படம் வீடியோ" 1

நடுவில் ஒரு சில கன்னட படமும், மலையாள படமும் நடித்தார். ஆனால் பெரிதாக தமிழிலேயே மார்க்கெட்டை கொண்டிருந்தார். திடீரென சிம்புவுடன் காதல், அந்த காதல் தோல்வி, பின் திருமணமான நடன இயக்குனர் பிரபுதேவாவுடன் காதல், அதிலும் பிரெச்சனை என அடுத்தது பல தனிப்பட்ட வாழ்க்கை பிரெச்சனையால் சினிமாவில் இருந்து ஒதுங்கி போனார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பிரம்மாண்டமாக நடைபெற்ற DON பட இயக்குனர் Cibi chakravarthy திருமண புகைப்படங்கள்..!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய “நானும் ரவுடி தான்” படம் அவருக்கு சிறப்பான வெற்றியை நீண்ட ஆண்டுகளில் பெற்றுத்தந்தது. அதையே ராஜா ராணி, விசுவாசம், பீகில், கோலமாவு கோகிலா, அறம், மாயா, இமைக்க நொடிகள் போன்ற படங்களும் தொடரவே மீண்டும் விட்ட தன்னுடைய இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.

"மாஸ் கெட்டப்பில் நயன்தாரா....ஆக்ஷனில் அடித்து நொறுக்கவுள்ள 75வது திரைப்படம் வீடியோ" 3

விளம்பரம்

சென்ற ஜூன் 9ஆம் தேதிசென்னையில் இவர்கள் இருவருக்கும் கல்யாணம் மிக பிரமாண்டமாக நடந்தது. இப்பொது வரை அந்த திருமணத்தின் பொது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கடைசியாக நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் “O2”. இவர் அடுத்து “ஜவான், கோல்ட்” போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

"மாஸ் கெட்டப்பில் நயன்தாரா....ஆக்ஷனில் அடித்து நொறுக்கவுள்ள 75வது திரைப்படம் வீடியோ" 5

விளம்பரம்

இந்நிலையில் இவரின் அடுத்த படம் அதாவது நடிகை நயன்தாராவின் 75வது படம் தற்போது தயாராகி வருகிறது. கதையின் நாயகியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்து வருகிறார். இணை தயாரிப்பாளர்களாக ஜீ ஸ்டுடியோஸ் இணைந்துள்ளது. இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு வெளியான “ஷிம்கா” என்ற மராத்தி படத்தை இயக்கியவர் ஆவார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

தொடர்புடையவை  பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கிய நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ..!

விளம்பரம்

Video Courtesy – ZeeStudios

விளம்பரம்

Leave a Comment