அப்பாவுக்கு மட்டும் இருக்காங்க.. எனக்கும் வேணும்.. தாயிடம் கதறி அழும் சிறுவன் | Viral Video

வெளியிட்டது

குழந்தைகள் செய்யும் சுட்டித் தனத்திற்கு அளவே இல்லை. குழந்தை பிறந்து, அது தவழ்ந்து, மழலை மொழி பேசி, அம்மா, அப்பா என அழைத்து குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தை நினைத்து நினைத்து வாழ்நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதனால் தான் வள்ளுவர் குழந்தையின் மழலைச் சொல் குழல், யாழ் இசையை விட இனிது என்று கூறுகிறார். இப்பொழுது பிறக்கும் குழந்தைகள் ஒரு ஆறு மாதத்திற்கு உள்ளாகவே ஆன்ட்ராய்டு போனை நோண்ட கற்றுக் கொள்கின்றன. தானே Youtube சென்று கார்டூன் வீடியோக்களை பார்க்கும் அளவிற்கு திறமைசாலிகளாக உள்ளனர்.

90களில் பிறந்த குழந்தைகள் காலத்தில் எல்லாம் கேமிராக்கள் இல்லை. எனவே பிள்ளைகள் செய்யும் குறும்புத்தனங்களை அவ்வளவாக படம் பிடித்து வைத்திருக்கக் முடியாது. மிஞ்சிப் போனால் ஸ்டியோவிற்கு சென்று ஒரு போட்டோ எடுத்து அதை டிவியின் மேல் வைத்திருப்பார்கள் அவ்வளவுதான். ஆனால் தற்போது உள்ள கம்ப்யூட்டர் காலத்தில் அனைவர் கையிலும் செல்போன் உள்ளது. குழந்தைகளை உடனே ஒரு வீடியோ எடுத்து அதை சமூக வலைத தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றுவிடுகின்றனர் பெற்றோர்கள்.  சின்னத்திரையில் புகழ் பெற்ற ஆல்யா சஞ்சீவ் தம்பதிகளின் குழந்தை ஐலாசையத் இணையத்தை கலக்கி வரும் குழந்தைகளில் ஒன்று. இது போல எண்ணற்ற குழந்தைகளின் சுட்டித் தனங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

அதுபோல தற்போது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு குட்டி சிறுவன் அழுது கொண்டிருக்கிறான். அவனது அம்மா உனக்கு இப்ப என்ன வேணும் என்று கேட்க, எனக்கு பொண்டாட்டி வேணும் என்று அழுது கொண்டே கூறுகிறான். அதற்கு அந்த பெண் உனக்கு என்ன வயசு ஆகுது அதுக்குள்ள பொண்டாட்டி வேணுமா என்று கேட்க, அப்பாக்கு மட்டும் பொண்டாட்டி இருக்காங்க எனக்கும் வேணும் என்று அழுது அடம் பிடிக்கிறான். இந்த வீடியோவை பார்த்த சிலர் குழந்தைகளை இது போன்று ஊக்கப்படுத்த வேண்டாம் என்று கமெண்டுகளை பறக்க விட்டு கொண்டிருக்கின்றனர். அந்த சிறுவனின் வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்