நடிகை சினேகா தனது மகள் ஆதிந்த்யாவின் 4வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா. இவர்கள் இருவரும் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும், இன்னும் அப்படியே இளமையுடன் இருந்து வருகிறார்கள். இதனாலையே இந்த ஜோடிகளை பலருக்கும் பிடித்திருக்கிறது.
2009ம் ஆண்டு ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
பின்னர் 2011ம் ஆண்டு தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்து, அதே ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணத்திற்கு சாட்சியாகவும் அழகிய குடும்பத்திற்கு உதாரணமாகவும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கிறது. முதல் மகன் பெயர் விஹான், இரண்டாவது மகள் பெயர் ஆதிந்த்யா.
சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் தொடர்ந்து ஏதாவது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சினேகாவின் இளைய மகளான ஆதிந்த்யாவுக்கு நேற்று 4வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் சினேகா. பலரும் சினேகாவின் மகள் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.