Categories: சினிமா

சினேகா வீட்டில் நடந்த வரலக்ஷ்மி பூஜை..! சாமி அலங்காரம் செய்த சினேகா.! அழகிய புகைப்படங்கள்

வெளியிட்டது

நடிகை சினேகா தனது வீட்டில் வரலட்சுமி பூஜையை மிக சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். இந்த பூஜையில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விகான் என்ற மகனும் ஆதித்ந்யா என்ற மகளும் உள்ளனர்.்சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சினேகாவும், பிரசன்னாவும் அப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றனர். மேலும் சமீபத்தில் உடல் எடை அதிகமாக இருந்த சினேகா தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். அந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவர் அப்பபோது தனது instagram பக்கத்தில் பதிவேற்றி பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்திருக்கிறார்.

சினேகா வீட்டில் நடந்த வரலக்ஷ்மி பூஜை..! சாமி அலங்காரம் செய்த சினேகா.! அழகிய புகைப்படங்கள் 1

சமீபத்தில் கூட தனது தந்தையின் பிறந்தநாளை ஒரு ஆதரவற்ற இல்லத்தில் சினேகா வெகு விமர்சையாக கொண்டாடியிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் சினேகாவின் உதவும் குணத்தை பாராட்டி இருந்தனர். தந்தைக்கஉ கூட தெரியாமல் அவரது பிறந்த நாளிற்காக ஆதரவற்ற இல்லங்களில் அவர் குழந்தைகளுக்கு உணவு, நோட்டு, புத்தகம், பேனா வழங்கினார். இந்த நிலையில் ஒவ்வொரு ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி பூஜையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார் சினேகா. இந்த பூஜையின் போது சாமியை தானே தன் கையால் அலங்கரித்து அதை வீடியோக்களாக எடுத்து vlogs ஆக வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த வருடம் நடைபெற்ற வரலட்சுமி பூஜையில் அவர் பல பிரபலங்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அந்த புகைப்படங்களை சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

அதில் நடிகர் விஜயகுமாரின் மகள்களான ப்ரீத்தா, ஸ்ரீதேவி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குனர் பாலா அவர்களின் முன்னாள் மனைவி முத்துமலர் போன்ற பலரும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களை சினேகாவின் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். சினேகா பல வருடங்களுக்குப் பிறகு சாபூத்திரி 2 என்னும் படத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்