“மதுரை மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள நடிகர் சூரி”!!தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆரும் நேரில் வந்து சிறப்பித்த சம்பவம்!!

வெளியிட்டது

"மதுரை மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள நடிகர் சூரி"!!தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆரும் நேரில் வந்து சிறப்பித்த சம்பவம்!! 1

நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் எந்த வித பின்புலமும் இன்றி கஷ்டப்பட்டு தானாகவே இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டுள்ளார். தமிழிலுள்ள முக்கிய நாயகர்கள் பலருடனும் நடித்துள்ள இவர் இவற்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டுள்ளார். பரோட்டா காமெடி, புஷ்பா புருஷன், பாயும் புலி பட காமெடி, சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியில் வெளியான படங்கள் என நிறைய காமெடி ஹிட்ஸ் கொடுத்துள்ளார். குறிப்பாக மற்ற நடிகர்களுடன் சில படங்களில் சொதப்பி இருந்தாலும், சூரியும் சிவகார்த்திகேயனும் இணைந்தால் படத்தில் காமெடி காட்சிகள் மிக சிறப்பாக இயல்பாகவே அமைந்து விடுகிறது.

இப்பொது விருது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் “விடுதலை” என்ற படத்தில் கதை நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். “துணைவன்” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா கட்டுப்பாடுகளால் தடைப்பட்டு வந்தாலும், இப்பொது முழுவதுமாக முடிவடையும் நிலையை எட்டி உள்ளது.

ஏற்கனவே படத்தில் இருந்து சூரி மற்றும் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்குள் இந்த படத்தை வெளியிட திட்டம் வைத்துள்ளனர் படக்குழு. சொந்த ஊரான மதுரையில் சூரி கஷ்டப்பட்டு சம்பாதித்த காசில் தனியாக “அம்மன் ரெஸ்டாரண்ட்” என ஒரு உணவகம் வைத்துள்ளார். இது மதுரைவாசிகளிடம் மிக குறைந்த விலையில் தரமான உணவுகளை கொடுத்து வருவதால் நல்ல பெயரை பெற்றுள்ளது.

இப்போது சூரி மற்றொரு ஹோட்டலை மதுரை ராஜாஜி மருதுவமனையில் திறந்துள்ளார். இந்த விழாவிற்கு தமிழக நீதி அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த ஓட்டலில் தக்காளி சாதம், லெமன் சாதம்,தயிர் சாதம், புளி சாதம், நெய் சாதத்தின் விலை 30ரூபாய் என்றும், பொன்னி அரிசி சாதம், சாம்பர், ரசம், பொறியல்,மோர், ஊறுகாயுடன் கூடிய புல்மீல்ஸ் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இதனால் அங்கு வரும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்காக இந்த ஓட்டலை தொடங்கி உள்ள சூரிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அப்போது அவர் பேசிய போது, “இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும்,பெருமையும் அடைகிறேன்.இந்த சாதாரண உணவகமாக தெரியலாம். ஆனால் இதன் பின்னால் மாபெரும் வெற்றி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே இடத்தில் இன்னொரு நபர் இதனை நடத்தி வந்தார். ஜனவரி மாதம் அதன் டெண்டர் முடிந்த போது அரசுக்கு இந்த மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த மாத வருமானம் 7000 ஆகும். புதிதாக டெண்டர் விடப்பட்டு தற்போது அரசுக்கு இந்த மருத்துவமனைக்கு கிடைக்க உள்ள மாத வருமானம் 1 லட்ச ரூபாய் ஆகும்.

தரமான உணவு பொருட்களை குறைவான விலைக்கு கொடுப்பதை இலக்காக கொண்டு,ஏற்கனவே துயரத்தில்,உடல் ரீதியான பிரச்சனைகளோடு இங்கு வருபவர்களுக்கு குறைவான விலையில் தரமான உணவை தர வேண்டும் என யோசித்து வெளிப்படை தன்மையுடன் டெண்டர் விடப்பட்டு சிறப்பான நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் என்னென்ன தவறுகள் நடைபெற்று இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.” என கூறினார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்