நடிகர் சூரி தரை துடைக்கும் மாப் குச்சியில் தேசியக் கொடியை கட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் சூரி. வடிவேலு சில காலமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தபோது திரைத்துறையில் இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இவர் காமெடி எடுபடவில்லை. இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பரோட்டா தின்று பேமஸ் ஆனதால் பரோட்டா சூரி என்று அழைக்கப்படுகிறார். பல படங்களில் இவர் செய்யும் காமெடிகள் மிக மொக்கையாக இருந்ததால் சூரியை பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் சூரி காமெடி சுத்தமாக எடுபடவில்லை. பலருக்கும் எரிச்சலையை கொடுத்தது. ஆனாலும் தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள படம் தான் விருமன் இந்த படத்தில் சூரி காமெடி ஓரளவுக்கு வேலை செய்துள்ளதாக படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் கூறினர். இப்படிப்பட்ட நிலையில் சூரி அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் விருமன் பட இசை வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. அங்கு பேசிய அவர் ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒரு பள்ளிக்கூடம் கட்டினால் பல ஜென்மம் பேசும் என்று பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு இணையதளத்தில் கடுமையான வைரலானது. அவரை பலரும் திட்டி தீர்த்தனர். மதுரையில் சூரி சமீபத்தில் ஒரு ஹோட்டல் கட்டி இருந்தை குறிப்பிட்டு ஹோட்டல் கட்டியதற்கு பதிலாக பள்ளிக்கூடம் கட்டி இருக்கலாமே? என்று நெட்டிசன்கள் சூரியை வறுத்து எடுத்து விட்டனர்.
மீண்டும் ஒரு மேடையில் பேசிய சூரி, தானும் கடவுள் பக்தன் தான், நான் கோவில் கட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை என்று தனது முந்தைய பேச்சுக்கு மன்னிப்பு கோரி இருந்தார். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்தபடியாக புது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இன்று நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அனைவரையும் சமூக வலைத்தளங்களின் முகப்பு பக்கங்களை மாற்ற வேண்டியும், வீடுகளில் தேசிய கொடி ஏற்றவும் அறிவுறுத்தி இருந்தார். இதனால் இன்று காலை தனது அப்பார்ட்மெண்ட் வீட்டு பால்கனியில் தேசிய கொடி ஏற்றி அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் சூரி. அதில் தரை துடைக்கும் மாப் குச்சியில் தேசிய கொடியை கட்டி இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சூரியை கடுமையான வார்த்தைகளில் திட்டி தீர்த்து வருகின்றனர்.