Categories: வைரல்

VJ சித்து நிலைமைதான் நட்சத்திராவுக்கு, தோழி பற்றி லைவ்ல் உளறி கொட்டிய ஸ்ரீநிதி | Sreenidhi

வெளியிட்டது

சமீபகாலமாக தனது பேச்சால் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீநிதி. சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி அவர் வீட்டின் முன்பு தர்ணாவிலும் ஈடுபட்டு வந்தார். அவரின் இந்த செயல்களைப் பார்த்து அவருக்கு Depression ஆகிவிட்டது, அவருக்கு மனநல ஆலோசனை தேவை என்றும் பலர் பதிவிட்டு வந்தனர். ஆனால் என்னை எல்லோரும் பைத்தியம் என்கிறீர்கள், நான் பைத்தியம் இல்லை, என்னை பிடிக்கவில்லை என்றால் பின் இன்ஸ்டாகிராமில் பின் தொடராதீர்கள் என்று விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியான நட்சத்திராவைப் பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதை தற்போது நீக்கியும் உள்ளார் ஸ்ரீநிதி.

VJ சித்து நிலைமைதான் நட்சத்திராவுக்கு, தோழி பற்றி லைவ்ல் உளறி கொட்டிய ஸ்ரீநிதி | Sreenidhi 1

யாரடி நீ மோகினி என்ற ஜீ தமிழில் வெளியான சீரியல் மூலம் புகழ் பெற்றவர் நட்சத்திரா. அவரைப்பற்றிதான் ஸ்ரீநிதி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் நட்சத்திரா ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்து இருக்கா, அவ நிறைய தப்பான விஷயங்கள் செய்து இருக்கா, ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது, அப்படி நட்சத்திரா தப்பான பொண்ணாக இருந்தால் என் வீட்டில் இரண்டரை ஆண்டுகள் அவளை வைத்திருக்க மாட்டேன் என்றும் கூறினார். Youtube Video Code Embed Credits: cinebeyonds

மேலும் நட்சத்திரா ஒரு பையனை காதலிக்கிறார், ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது தெரியாது,  நட்சத்திராவின் வாழ்க்கைய காப்பாத்த முடியல, என் நம்பரை பிளாக் பண்ண வச்சிட்டாங்க..நட்சத்திராவின் சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை, இதெல்லாம் கேட்டதற்கு என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க, சித்து நிலைமை நட்சத்திராவுக்கு நடந்துடும்ன்னு பயமா இருக்கு என்றும் அவர் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோழியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேசிய ஸ்ரீநிதிக்கு மனநலம் முற்றிவிட்டது என்று நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். Watch the below video

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்