இனி இவருக்கு பதில் இவர்.? சீதாராமன் தொடரில் புதிய சீதாவாக நடிக்க போவது இவரா.?

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரிலிருந்து பிரியங்கா நல்காரி விலகி விட்ட நிலையில் தற்போது இவருக்கு பதில் வெள்ளித்திரை நாயகி ஒருவர் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலமாக பல இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த வருடம் திடீரென இந்த சீரியல் நிறைவடைந்தது. தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதாராமன் என்கிற தொடரில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் பிரியங்கா நல்காரி. இந்த கதையின் கதை குறித்து பார்த்தோம் என்றால் தனக்கு அழகான மருமகள் வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் மாமியாருக்கு கண்ணாடி அணிந்து உருவத்தில் சிறிது பருமனான மருமகள் கிடைத்து விடுகிறார். ஒரு பெண்ணின் அழகு என்பது மனதை வைத்துதான், உருவத்தை வைத்து அல்ல என்கிற கருத்தை மையமாகக் கொண்டு இந்த நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இனி இவருக்கு பதில் இவர்.? சீதாராமன் தொடரில் புதிய சீதாவாக நடிக்க போவது இவரா.? 1

இந்த நாடகம் ஒளிபரப்பான சில நாட்களில் தனது காதலரை கரம் பிடித்து இருந்தார் பிரியங்கா நல்காரி. மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. வீட்டில் உள்ள யாரையும் அழைக்காமல் பிரியங்காவும் காதலரும் மட்டுமே இந்த திருமணத்தை நடத்தி இருந்தனர். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்த பிரியங்கா, திடீரென சீதாராமன் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது குடும்ப சூழல் மற்றும் கணவரின் விருப்பத்தின் பேரில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது இந்த சீரியல் ரசிகர் படியே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சீரியல் தொடங்கி மூன்று மாதங்கள் கூட தாண்டாத நிலையில் சீரியலின் கதாநாயகியே சீரியலை விட்டு விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சீதா ரோலில் அடுத்து யார் நடிக்க இருக்கிறார்கள் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் தற்போது வெள்ளித்திரை ஹீரோயின் ஒருவர் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் தகவல் கிடைத்திருக்கிறது.

செந்தூரப்பூவே நாடகத்தில் நடித்து வந்த ஸ்ரீநிதி சீதாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் தான் இந்த நாடகத்தில் நடிக்கவில்லை என்று மறுத்திருந்தார். தற்போது சசிகுமாரின் “மிக மிக அவசரம்” படத்தில் ஸ்ரீ பிரியங்கா என்பவர் முக்கிய கதாபாத்திரல் நடித்து இருந்தார். தற்போது அவர் தான் சீதாவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2019 வெளியான ஆசாமி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரீபிரியங்கா. இவர் மிக மிக அவசரம், கொம்பு வச்ச சிங்கமடா, 13ம் பக்கம் பார்க்க, கங்காரு, ஸகெட்ச் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். பலருக்கும் பரிச்சயம் இல்லாத நடிகையாக இவர் இருக்கும்போதிலும் மிக மிக அவசரம் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஸ்ரீ பிரியங்கா. இந்த நிலையில் இவர்தான் தற்போது சீதாவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோவை சீரியல் குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

Youtube Video Embed Code Credits: Tamil Serial Express – Hema

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்