கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி. இவர் கடந்த மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் ஹாஸ்டலில் 3வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இது திட்டமிட்டு நடந்த வன்முறை என்று போலீசார் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எங்கிருந்தோ வந்த ஆட்கள் பள்ளியை தீக்கிரையாக்கினர். பள்ளிக்கு சொந்தமான 50 பேருந்துகளை தீயிட்டு கொளுத்தினர். பள்ளியே உருக்குலைந்து போகும் அளவிற்கு போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து உடைத்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பள்ளியின் உரிமையாளர், தாளாளர் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதிக்கு இன்று 17வது பிறந்த நாள். ஸ்ரீமதியின் படத்திற்கு அவரது தாயார் மாலைகள் போட்டு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் கேக் அல்லது இனிப்பு செய்து பிறந்தநாளை கொண்டாடுவோம். ஆனால் இன்று பிறந்தநாளை கொண்டாட அவர் உயிருடன் இல்லை என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும் பிறந்தநாளின் போது எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று ஸ்ரீமதி ஒரு நாள் கூட கேட்டதே இல்லை, நானாக தான் எல்லாம் வாங்கி கொண்டு வந்து குடுப்பேன் என்றும் கண்ணீருடன் பேசினார். மேலும் ஸ்ரீமதியின் பிறந்தநாளையொட்டி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
அதில் அவர் உயிரழந்த என் மகள் பூவாகவும், காயாகவும், அனைவர் வீட்டு வாசலிலும் இருக்க வேண்டும் என்பதற்காக கிராமத்தில் உள்ள அனைவர் வீட்டிற்கும் 2000 மரக்கன்றுகள் வாங்கி கொடுத்துள்ளதாக கூறினார். மரங்களின் வழியாக தன் மகள் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்றும், தனக்கு பலரும் ஆறுதல் கூறி வருவதால் ஒரு பிள்ளையை எடுத்துக் கொண்ட ஆண்டவன் பல பிள்ளைகளை கொடுத்து இருக்கிறான், இது மனதில் ஆயிரம் துக்கம் இருந்த போதிலும் ஒரு சிறு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் ஸ்ரீமதியின் தாயார் பேசினார். மகள் இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வீடு வீடாக சென்று மரக்கன்றுகளை வழங்கிய அந்த தாயின் உணர்வுகள் உண்மையில் பாராட்டத்தக்கது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code embed credits: Polimer News