Categories: சினிமா

சூர மொக்க.! படம் பாத்தவன் எல்லாம் அருவாளோட சுத்திட்டு இருக்கான்.! கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை

வெளியிட்டது

நடிகர் கவின் நடிப்பில், இயக்குனர் இளன் இயக்கத்தில் வெளியான ‘ஸ்டார்’ படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறும் பொழுது இந்த படத்தின் கதை குறித்து பார்த்தோம் என்றால், ஹீரோவின் அப்பா சினிமாவில் ஹீரோவாக நினைக்கிறார். ஆனால் அவரால் முடியாததால் தனது மகனை ஹீரோவாக முடிவு எடுக்கிறார். எனவே சிறு வயதிலிருந்து பள்ளியில் டிராமாவில் சேர்த்து நடிக்க வைக்கிறார். பின்னர் ஹீரோ சினிமா வாய்ப்பு தேடுகிறார். அவருக்கு பல தடங்கள் வருகிறது. பின்னர் என்ன நடந்தது? அவர் ஹீரோ ஆனரா? என்பது தான் கதை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூர மொக்க.! படம் பாத்தவன் எல்லாம் அருவாளோட சுத்திட்டு இருக்கான்.! கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை 1

ஆனால் முதல் பாதியில் ஹீரோ படங்களில் வாய்ப்பு தேடுவதை விட்டுவிட்டு ஒரு ஹீரோயினை காதலிக்கிறார். அவரிடம் மோட்டிவேஷனல் ஸ்பீச் பேசுகிறார். பின்னர் அது பிரேக்கப் ஆகி விடுகிறது. பின்னர் இன்னொரு ஹீரோயின் வருகிறார். அவரை காதலிக்கிறார். இப்படியாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. சினிமா என்றால் என்னன்னே தெரியாது போல் படத்தை எடுத்து வைத்துள்ளார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் ஹீரோ பாம்பேவுக்கு போய் நடிப்பு கற்றுக் கொள்ளப் போகிறேன் என்கிறார். பாம்பேவில் இருப்பவன் பூரா விஜய் ஆண்டனி மாதிரி தான் நடிப்பான்.

இது ஒரு குறும்படத்திற்கான கதை. இந்த படத்தில் முதலில் வந்த காதலி, பாம்பே காட்சிகள், இரண்டாவது வந்த காதலியை தூக்கி விட்டால் படத்தில் ஒன்றுமே இல்லை. இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என ஹரிஷ் கல்யாண் விலகியது அவருக்கு கொஞ்சமாவது சப்ஜெக்ட் நாலேஜ் இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் கவினுக்கு சப்ஜெக்ட் நாலேஜ் இல்லை. இது ஒரு சூரை மொக்கை படம். ட்ரைலரை பார்த்து விட்டு அனைவரும் படத்திற்கு வந்தனர். ட்ரைலர் வீடியோவை எடிட் செய்தவன் மீது கோபத்தில் பல பேர் அருவாளோட சுற்றிக் கொண்டிருக்கிறான் என விமர்சித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்