என்ன சும்மா போங்கு ஆட்டம் ஆடிட்டு இருக்கீங்க?? திடீரென டென்ஷனாகி கத்திய வனிதா..!

வெளியிட்டது

ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்த வனிதா விஜயகுமார் தற்போது “நீங்கள் போங்கு ஆட்டம் ஆடுகிறீர்கள், எனக்கு குறும்படம் போடுங்கள் என்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சின்னத்திரை உலகில் சர்ச்சைக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். இவர் பிரபல பழம்பெறும் நடிகர்களாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகளாவார். இவர் தனது பெற்றோர்களுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தனியாக வாழ்ந்து வந்தார். ஊர் அறிய மீடியா முன்பாக இவர் தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டதால் குடும்பத்தினர் யாரும் இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. இவரது தாய் தந்தை உடன்பிறந்த சகோதரிகள் என்று யாரும் இவருடன் பேசுவதில்லை. மேலும் இரண்டு முறை திருமணமாகி இருவருடனும் விவாகரத்தாகி தனது இரு மகள்களுடன் சென்னையில் தனியாக வசித்து வந்தார் வனிதா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன சும்மா போங்கு ஆட்டம் ஆடிட்டு இருக்கீங்க?? திடீரென டென்ஷனாகி கத்திய வனிதா..! 1
இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 3ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சின்ன திரையில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார் வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பெயர் போன நபராக இருந்தார் வனிதா. அதன் பின்னர் வனிதா எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் அதில் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ்க்கு பின்னர் வனிதாவிற்கு செல்வாக்கு கூடியது. தற்போது வனிதா பிரியங்கா நடத்தி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். இதில் வனிதாவுடன் ஐஸ்வர்யா, சிங்கப்பூர் தீபன், சரத் ஆகியோரும் வந்துள்ளனர். இந்த நிலையில் வனிதா ஒரு பாடலை தவறாக பாட அவரது முகத்தில் ஸ்பிரே அடிக்கப்பட்டது. இதனால் கடுப்பான வனிதா நீங்க போங்கு ஆட்டம் ஆடுறீங்க என்று சொல்லி பிரியங்காவிடம் கோபப்பட்டார்.

மேலும் தான் சரியாக பாடியதாகவும், ஆனால் தன் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டதாகவும், தனக்கு குறும்படம் போடும் படியும் அவர் கூறினார். இதனால் பிரியங்கா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்