திடீரென சீதா ராமன் சீரியலில் இருந்து விலகிய நடிகை.! இனி இவருக்கு பதில் இவரா? தீயாக பரவும் வீடியோ.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீதாராமன் தொடரில் இருந்து பிரியங்கா நல்காரி விலகியதையடுத்து அடுத்து யார் சீதாவாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி உள்ளது. சன் தொலைக்காட்சியில் மூன்று வருடத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த சீரியல் தான் ரோஜா. இதில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியலில் இவருக்கும் சிபுசூரியனுக்கும் இடையே இருக்கும் நல்ல கெமிஸ்ட்ரிக்காகவே பலரும் இந்த நாடகத்தை விரும்பி பார்க்க தொடங்கினர். கடந்த ஆண்டு இந்த சீரியல் யாரும் எதிர்பாராத விதமாக நிறைவடைந்தது .இதைத் தொடர்ந்து சன் டிவியில் இருந்து விலகிய பிரியங்கா நல்காரி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதாராமன் என்கிற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இந்த தொடரில் ஜெய் டிசோஸா ஹீரோவாக நடிக்க பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக பிரியங்கா அறிவித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திடீரென சீதா ராமன் சீரியலில் இருந்து விலகிய நடிகை.! இனி இவருக்கு பதில் இவரா? தீயாக பரவும் வீடியோ.! 1

விளம்பரம்

சில மாதங்களுக்கு முன்பாக பிரியங்கா நல்காரியும் அவருடைய காதலரும் மலேசியாவில் ஒரு கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஏற்கனவே தனது காதலருடன் நிச்சயம் முடிந்தது இருந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணத் தடைபட்டிருந்தது. பின்னர் இருவரும் கலந்து பேசி சமரசம் செய்து கொண்டு மலேசியாவில் வைத்து குடும்பத்தினர் யாருமே இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தனது கணவருக்கு நடிப்பதில் உடன்பாடு இல்லாத காரணத்தால் சீதாராமன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பால் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. சீரியல் ஆரம்பித்து சில மாதங்களே கடந்த நிலையில் பிரியங்காவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அடுத்த சீதாவாக யார் நடிக்க இருக்கிறார் என்கிற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்தது.

தொடர்புடையவை  CWC நிகழ்ச்சிக்கு வருகை தந்த இயக்குனர் மாரி செல்வராஜ்.! கடைசி ப்ரோமோவை வெளியிட்ட விஜய் டிவி.!

திடீரென சீதா ராமன் சீரியலில் இருந்து விலகிய நடிகை.! இனி இவருக்கு பதில் இவரா? தீயாக பரவும் வீடியோ.! 3

விளம்பரம்

பிரியங்கா நல்காரி நடித்து முடித்த காட்சிகள் சில எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பப்பட இருப்பதால் அடுத்த சீதாவாக நடிப்பவர் குறித்த கேள்வி எழுந்தது. பிரியாங்காவின் காட்சிகள் இன்னும் ஒரு சில எபிசோடுகள் மட்டுமே இருப்பதால், சீதா கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ரீநிதி நடிக்க இருக்கிறார் என்று தகவல் பரவியது. அதேபோல் ஸ்ரீநிதியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் அவர் சீதா கெட்டப் போலவே கண்ணாடியும் உடையும் அணிந்திருந்தார். இதனால் இவர் தான் அடுத்த சீதாவாக நடித்து இருக்கிறார் என்று தகவல்கள் பரவத் தொடங்கியது. ரசிகர்களும் கமெண்டில் அதை உறுதி செய்ய தொடங்கினர். சீதா கதாபாத்திரத்திற்கு ஸ்ரீநிதி எந்த அளவிற்கு பொருத்தமாக இருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஸ்ரீநிதி ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே நாடகத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநிதியே வெளியிட்ட அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment