ஜெயிலராக ரஜினி, தீவிரவாதியாக சிவராஜ்குமார்!! தீயாக இறங்கி வேலை செய்யும் நெல்சன்!!இணையத்தை அலறவிடும் ஜெயிலர் படத்தின் கதை!!

வெளியிட்டது

ஜெயிலராக ரஜினி, தீவிரவாதியாக சிவராஜ்குமார்!! தீயாக இறங்கி வேலை செய்யும் நெல்சன்!!இணையத்தை அலறவிடும் ஜெயிலர் படத்தின் கதை!! 1

40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை. துவங்கியது முதல் இன்று வரை யாராலும், எந்த தோல்வியாலும் சோர்ந்து விடாமல் இன்றளவும் முன்னணியில் இருக்கிறார். 70களில் இவருடன் அறிமுகமான பல நாயகர்கள் இப்பொது சினிமா துறையிலேயே இல்லாமல் போய்விட்டார்கள். இருப்பினும் இவர் இன்று ஆசிய அளவில் உற்றுநோக்கப்படும் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். 70வயதை தாண்டியும் இவர் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார்.

அண்மையில் இவர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கிய “அண்ணாத்தே” திரைப்படம் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய போதிலும், மிக மோசமான விமர்சனத்தையே சந்தித்தது. இருப்பினும் ரஜினி என்ற ஒற்றை சொல்ல படம் அவ்வளவு பெரிய வசூலை ஈட்ட உதவியது. இதனை தன்னுடைய அடுத்த படத்தில் சரி செய்ய யோசித்து தொடர்ந்மது “கோலமாவு கோகிலா, டாக்டர்” என வெற்றி படங்களை கொடுத்து, விஜயுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு “பீஸ்ட்” திரைப்படத்தை இயக்கி வந்த நெல்சனுடன் கூட்டு சேர்ந்தார் ரஜினி. இந்த கூட்டணி விஜயின் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூலை வாரி குவித்தாலும், விமர்சன ரீதியாக மிக பெரிய ஏமாற்றத்தை பெற்றது. காமெடியை முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்து வந்த நெல்சன் இந்த படத்தில் காமெடி, விஜயின் மாஸ் இரண்டில் எதை சரியாக கையாளுவது என தெரியாமல் தோல்வியடைந்ததே படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்தது.

இதனால் அடுத்து இயக்க இருந்த தலைவர் 169 படத்திற்கு பல்வேறு வகையிலான எதிர்ப்புகைளை எதிர் கொண்டார் நெல்சன். ரஜினி நம்பிக்கை இல்லாமல் படத்தை ட்ரோப் செய்துவிட்டார் என்றும், நெல்சனே படத்தில் இருந்து விலகியதாகவும் பல்வேறு வகையிலான செய்திகள் தினமும் வந்து கொண்டே இருந்தன. தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ்  சார்பிலும் எந்தவித தெளிவும் அளிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் துபாய் சென்று இருந்த நெல்சன், படத்திற்கு ஷூட்டிங் லொகேஷன் பற்கே அங்கு சென்றதாகவும், ரஜினி கதையில் சில மாற்றங்கள் மட்டுமே கூறியதாகவும், மற்றபடி படம் விரைவில் துவங்கவும் எனவும் சிலர் கூறிவந்தனர். இதற்கிடையில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவா ராஜ்குமார் ஒரு பேட்டியில் நான் ரஜினியுடன் அடுத்த படத்தில் நடிப்பது உண்மையே, கதை மிகவும் நன்றாக இருந்தது, இதனால் படம் குறித்த நிகழ்வுகள் மீண்டும் தலைதூக்க துவங்கின.

எல்லா விஷயங்களுக்கும் முற்று புள்ளி வைத்து, நேற்று சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளது. இதனால் நெல்சன் இயக்க போவது 100% உறுதியாகியுள்ளது. தன்னுடைய முந்தைய படத்தில் செய்த தவறை இந்த படத்தில் சரி செய்து கொண்டு தான் மீது மிக பெரிய நம்பிக்கை வைத்துள்ள ரஜினிக்கு மிக பெரிய வெற்றியை கொடுக்க உழைத்து வருவதாகவும் நெல்சனின் நலம் விரும்பிகள் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது ஜெயிலர் படத்தின் கதை இதுதான் என ஒரு செய்தி உலா வருகிறது.  இது உண்மையா? பொய்யா? என தெரியவில்லை, ஆனால் இப்போதைய தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் நியூஸ் இதுதான். அதாவது ஜெயிலர் படத்தில் சிறையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க வெளியிலிருந்து ஒரு நபர் வருகிறார் என்றும் அவரை தடுக்க ஜெயிலர் போராடுவது போல் கதை அமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது அந்த தீவிரவாதி கதாபாத்திரத்தை தப்பிக்க வைக்கும் கதாபாத்திரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்றும், ஜெயிலராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது. ஏற்கனவே தனியார் பேட்டியில் நடிகர் சிவராஜ்குமார் தான் இந்த படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இது தான் கதையாக இருக்குமோ? என ரசிகர்கள் பலரும் யோசித்து வருகிறார்கள்.

 

முதல் இரண்டு படங்களில் நெல்சனுக்கு மிக உதவிய காமெடி தான் “பீஸ்ட்” படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம். அதை கொஞ்சம் பார்த்து சரி செய்து கொண்டு இந்த படத்தில் அவர் களமிறங்கினால் நிச்சயம் வெற்றிவாகை சூடுவர் என எதிர்பார்க்கலாம். நெல்சன் சென்ற படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடிப்பாரா? என்பதை கொஞ்சம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்