Categories: சினிமா

வடசென்னை அன்புவுடன் மோதும் அரசன்..! வெளியான STR படத்தின் Title..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. அண்மையில் இவருக்கு படங்கள் மூலம் சரியான வெற்றிகள் கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் ரசிகர்களுக்காக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷை வைத்து இயக்கி சூப்பர் ஹிட் அடித்த வடசென்னை படத்தின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

வடசென்னை அன்புவுடன் மோதும் அரசன்..! வெளியான STR படத்தின் Title..! 1

இப்படத்திற்கு சிம்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அண்மையில் படம் குறித்து அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை படக்குழு வெளியிட்டு உள்ளது. படத்திற்கு அரசன் என படக்குழுவினர் பெயரிட்டு உள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் போஸ்டரை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இப்படத்திற்கு பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பதாக கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். மேலும் வட சென்னை படத்தினை மையமாக கொண்டு உருவாகி வருவதால் படத்தில் தனுஷ் வர வாய்ப்பு அதிகம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெளியிட்டது

புதிய செய்திகள்