Categories: சமூகம்

வலுவடைந்த புயல் ‘மஹா’புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்!!

வெளியிட்டது
வலுவடைந்த புயல் ‘மஹா’புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம்!! 1

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் தென் மாவட்டங்களில் மழை அதிக அளவில் பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்த வரை நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கும், ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று காலை திருவனந்தபுரத்துக்கு தென்மேற்கில் சுமார் 220 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டது. பின்னர் அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘மஹா’என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது ஓமன் நாடு சூட்டிய பெயர் ஆகும். இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

லட்சத் தீவுகள் அருகே நிலைகொண்டிருந்த மஹா புயல், வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. மஹா புயல் தற்போது அமிந்தி தீவுகளுக்கு வடகிழக்கே 90 கி.மீ. தொலைவிலும் , கோழிக்கோட்டிற்கு வடமேற்கே 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் லட்சத்தீவுகளில் அதி கனமழையும், கேரளா மற்றும் தமிழக மாவட்டங்களில் பரவலாக கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்றின் வேகம் 120 கி.மீட்டர் வரை இருக்கும் எனவும் நவம்பர் 4-ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் கியார் புயல் உருவாகியுள்ள நிலையில் நேற்று இரண்டாவதாக மஹா புயல் உருவானது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்