நடிகர் சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு நடிகை சுவாதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். தற்போது இந்த திரைப்படம் வெளியாகி பல வருடங்களை கடந்த நிலையில் மறுபடியும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் மீண்டும் திரையிடப்பட இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலரை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த ஒரு படம்தான் சுப்ரமணியபுரம். 1980ல் காலகட்டத்தில் நடந்த கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரின் காஸ்டியூமும் எடுக்கப்பட்ட விதமும் 1980 காலகட்டத்தை நினைவு படுத்தியது. இந்த படம் மலையாளத்தில் அதே பெயரிலும், தெலுங்கில் அனந்தபுரம் என்கிற பெயரிலும், கன்னடத்தில் பிரேம் அடா என்கிற பெயரிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜெய், ஸ்வாதி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
இயக்குனராக இருந்து பின்னர் நடிகராகும் ஆசையினால் திரைத்துறைக்கு நடிக்க வந்தவர் சசிகுமார். இவரின் முதல் படம் 1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் தான். இதில் சேதுவின் நண்பராக சிறிய கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடித்திருந்தார்.
பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். மேலும் இந்த படத்தை அவரே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். அதன் பின்னர் பல படங்களில் சசிகுமார் நடித்து முடித்திருக்கிறார். இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதை முன்னிட்டு தற்போது படத்தில் இருந்து ட்ரைலர் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sony Music South