எங்கள ஏமாத்திட்டு எங்கடா போனான் அந்த ஆளு.? எழிலை திட்டி தீர்க்கும் ஆர்த்தியின் பெற்றோர்கள்.!

கயல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கயலைத் தேடிச் சென்ற எழில் மீது தற்போது ஆர்த்தியின் பெற்றோர்கள் சந்தேகப்படுகின்றனர். இதனால் அடுத்த பரபரப்பு எழுந்திருக்கிறது. சன் டிவியில் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது கயல் சீரியல். டிஆர்பி ரேட்டிங்கிலும் யாரும் தொட முடியாத அளவிற்கு அடிக்கடி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து வருகிறது இந்த சீரியல். தற்போது கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா என்கிற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எங்கள ஏமாத்திட்டு எங்கடா போனான் அந்த ஆளு.? எழிலை திட்டி தீர்க்கும் ஆர்த்தியின் பெற்றோர்கள்.! 1

விளம்பரம்

தற்போது எழிலின் தாயார் சிவசங்கரியின் சூழ்ச்சிக்கு பலியான கயல் கௌதமால் கடத்தப்பட்டிருக்கிறார். கடத்தியது மட்டுமில்லாமல் கயலின் கதையை முடித்து விடுமாறு சிவசங்கரி கௌதமை அறிவுறுத்துகிறார்.

இதனால் கயிலை ஃபேனில் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டிருக்கிறார் கௌதம். மேலும் அவரது காலடியில் ஐஸ் கட்டியையும் வைத்திருக்கிறார். ஐஸ்கட்டி கரைந்து தானாக கயிறு கயலின் கழுத்தை நெருக்கி இறந்து விடுவது போல கௌதம் செட்டப் செய்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது கயலைத் தேடி எழில் ஒரு பக்கம் அலைந்து கொண்டிருக்கிறார். கயலை காணாமல் பரிதவிக்கும் எழில் ஒவ்வொரு இடமாக சென்று கேட்கிறார். அப்போது அவருக்கு பெட்ரோல் பங்கில் ஒரு துப்பு கிடைக்கிறது. கடைசியாக பெட்ரோல் போட்டவரின் நம்பரை வாங்கிக்கொண்டு அதற்கு ஃபோன் செய்கிறார் எழில்.

விளம்பரம்
தொடர்புடையவை  "பாக்யாவை திருமணம் பண்ணிக்கோங்க சார்".! பழனிசாமியிடம் கோரிக்கை வைத்த ராதிகா.!

எங்கள ஏமாத்திட்டு எங்கடா போனான் அந்த ஆளு.? எழிலை திட்டி தீர்க்கும் ஆர்த்தியின் பெற்றோர்கள்.! 3

அப்போது கௌதம் குரூப்பில் இருந்து ஒருவர் அந்த போனை எடுக்கிறார். மறுபுறம் எழிலுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஆர்த்தியின் பெற்றோர்கள் எழிலின் நண்பரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

விளம்பரம்

எழில் தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக கூறி தற்போது ஆர்த்தியின் பெற்றோர்கள் எழிலின் நண்பரிடம் கத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் அடுத்த என்ன நடக்கும்? எழில் கயல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை காப்பாற்றிக் கொண்டு வருவாரா.? கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா? என்பதெல்லாம் இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். தற்போது வெளியாகியிருக்கும் அந்தப் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment