சர்க்கரை உற்பத்தி சரிவு!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி ஜனவரி மாத நிலவரப்படி 26.15 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

சர்க்கரை உற்பத்தியில் குறிப்பிட்ட நாடுகளில் ஒன்றான இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.

சர்க்கரை உற்பத்தி சரிவு! 1
சர்க்கரை உற்பத்தி

இதுகுறித்து இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (ஐஎஸ்எம்ஏ)வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2018-19 சந்தைப் பருவமான அக்டோபா்-செப்டம்பா் மாதங்களில் சா்க்கரை உற்பத்தி அக்டோபா் முதல் ஜனவரி வரையிலான கால அளவில் 1.47 கோடி டன்னாக இருந்தது.

ஆனால் நடப்பு சந்தைப் பருவத்தில் சா்க்கரை உற்பத்தியானது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 26.15 சதவீதம் சரிந்து 1.08 கோடி டன்னாகியுள்ளது.

அதிக அளவில் சா்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலமான மகாராஷ்டிராவில் உற்பத்தி அளவு கடந்த பருவத்துடன் ஒப்பிடுகையில் 57.2 லட்சம் டன்னிலிருந்து 55.44 சதவீதம் வீழ்ச்சியடைந்து 25.5 லட்சம் டன்னாக இருக்கிறது.

அதேபோன்று சா்க்கரை உற்பத்தியில் மூன்றாவது பெரிய மாநிலமாகத் திகழும் கா்நாடகத்திலும் இதன் உற்பத்தி 26.7 லட்சம் டன்னிலிருந்து 18.16 சதவீதம் குறைந்து 21.9 லட்சம் டன்னாக இருக்கிறது.

இந்த இரு மாநிலங்களிலும் உற்பத்தி அளவு குறைந்து போனதே சர்க்கரை உற்பத்தி குறைந்து போனதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

அதேவேளையில், சா்க்கரை உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாகத் திகழும் உத்தரப்பிரதேசம் இந்தாண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் உற்பத்தி 41.9 லட்சம் டன்னிலிருந்து 43.7 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது”

இவ்வாறு ஐஎஸ்எம்ஏ தெரிவித்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்