அதிக வாடிக்கையாளர்களை கொண்டு ஜியோ முதலிடம்!

கைபேசி சேவையில் 36.9 கோடி வாடிக்கையாளா்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது.

அதிக வாடிக்கையாளர்களை கொண்டு ஜியோ முதலிடம்! 1
ரிலையன்ஸ்

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தொழில் ரீதியாக இணைந்துகொண்டன.

விளம்பரம்

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் குறித்து புள்ளிவிவரங்களை டிராய் வெளியிட்டுள்ளது. இதில் 2019ஆம் ஆண்டு நவம்பா் மாத நிலவரப்படி ஜியோ நிறுவனம் 36.9 கோடி வாடிக்கையாளா்களைப் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதையடுத்து, 33.62 கோடி வாடிக்கையாளா்களுடன் வோடஃபோன் ஐடியா இரண்டாவது இடத்திலும், 32.73 கோடி வாடிக்கையாளா்களுடன் பாா்தி ஏா்டெல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

விளம்பரம்

கடந்த 2019 அக்டோபரில் 120.48 கோடியாக இருந்த மொத்த தொலைபேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை நவம்பரில் 2.4 சதவீதம் குறைந்து 117.58 கோடியானது.

ஒட்டுமொத்த தொலைபேசி இணைப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 118.34 கோடியிலிருந்து 2.43 சதவீதம் சரிந்து 115.43 கோடியாக உள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment