“இது என்னடா புதுசா இருக்கு”!!நடிக்கும் நடிகர்களுக்கே தெரியாமலேயே கடைசி நாள் ஷூட்டிங்கை முடித்த தயாரிப்பு நிறுவனம்!!TRP’இல் முன்னணியில் இருந்தும் அவரசமாக முடிவுக்கு வந்த தொடர்!!!!

வெளியிட்டது

இப்போதுள்ள சின்னத்திரை ரசிகர்களுக்கு விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களே பெரிதும் கவருகினறன. இந்த தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள் பலவற்றிற்கும் ரசிகர்கள் பலரும் பலத்த வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். ஆனால் இதெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் சம்பவங்களே. 2000ஆம் தொடக்கத்திலிருந்து இந்த விஷயம் குறித்து பார்த்து வந்தால் கதையே வேறு.

"இது என்னடா புதுசா இருக்கு"!!நடிக்கும் நடிகர்களுக்கே தெரியாமலேயே கடைசி நாள் ஷூட்டிங்கை முடித்த தயாரிப்பு நிறுவனம்!!TRP'இல் முன்னணியில் இருந்தும் அவரசமாக முடிவுக்கு வந்த தொடர்!!!! 1

ஆம், இவர்களுக்கெல்லாம் முன்னோடி அல்ல முத்தகுடியே சன் டிவி தான். ஒன்றல்ல இரண்டல்ல பல்வேறு தொடர்கள் இந்த தொலைக்காட்சியில் வந்து இன்றளவும் ரசிகர்கள் பலரும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் படி அமைந்த தொடர்கள் பல உள்ளன. அன்றைய காலகட்டங்களில் நடிகர்களுக்கே சினிமாவில் மிகவும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் நடிகைகள் வெறும் கவர்ச்சி பொருளாகவே இருந்தனர். சில ஆண்டுகள் கழித்து மவுசு குறையும் அவர்கள் திருமண செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கிய நிலையில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது சின்னத்திரையே.

ஆம் நடிகைகள் ராதிகா, சிம்ரன், தேவயானி, ரம்யாகிருஷ்ணன் போன்ற பல் முன்னணி திரை நாயகர்கள் அடுத்தடுத்து சின்னத்திரையில் தொடர்களில் நாயகையாக தோன்றினார். குறிப்பாக ராதிகா நடித்த சித்தி, தேவயானியின் கோலங்கள், ரம்யா கிருஷ்ணனின் வம்சம் போன்றவை ரசிகரக்ளின் மிக பெரிய ஆதரவை பெற்றன. சினிமாவில் வாய்ப்பு குறைத்த ரம்யாகிருஷ்ணன் இதன் மூலமே மீண்டும் சினிமாவில் வாய்ப்பு பெற துவங்கினார்.

இப்போது மிகவும் பிரமாண்டமான தொடர்களை தயாரித்து ஒளிபரப்பி வரும் சன் டிவியின் மற்றொறு முக்கிய தொடர் “பூவே உனக்காக”.  கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த தொடரில் முதலில் இருநாயகிகளில் ஒருவராக பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிகா நாயகியாக நடிக்க வந்தார். பின்னர் மேற்படிப்பை தொடருவதற்காக அதில் இருந்து அவர் விலக, தொடர்ந்து நாயகனாக நடித்த அருணும் விலகினார்.

இவர்கள் விலகிய பிறகு புது வரவாக இந்த தொடரில் வந்தவர்கள் விஜய் டிவி புகழ் அஸிமும், கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட நடிகை ராதிகாவும். இவர்கள் இருவரும் வந்த பிறகே இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற துவங்கியது. குறிப்பாக ஏற்கனவே பிரபலமாக இருந்த அசீமின் வரவு இந்த இந்நிகழ்ச்சிக்கு மிகவும் உதவியது. நீண்ட காலமாக TRP’இல் மிகவும் பின்தங்கிய சன் டிவியின் தொடர்களில் இது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற துவங்கியது.

மேலும் ரசிகர்களையும் இது மிகவும் கவர்ந்தது. கதை படி நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து விட, தன் தந்தையை கொன்றவனை நாயகன் தேடிக்கொண்டிருக்குக்க, மிக பெரிய சூழ்ச்சிகளை ஒரு புறம் வில்லன் செய்து வந்து கொண்டிருந்தார். ஆனால் கடந்த 8ஆம் தேதி வழக்கம் போல் ஷூட்டிங் சென்ற நடிகர்கள்  பலருக்கும் என்ன நடிக்கிறது என்று புரியாமல் இருந்துள்ளது.

வில்லன் தான் செய்த தவறுகள்  அனைத்தையும் தானாகவே ஒப்புக்குகொண்டு திருந்துவது போலவும், நாயகனுக்கு தந்தையை கொன்றவன் எளிதில் கிடைப்பது போலவும், திடீரென நாயகிக்கு பழைய நினைவுகள் வந்து பேசுவது போலவும் ஒன்றும் புரியாத படி ஷூட்டிங் நடந்துள்ளது. இது குறித்து நடித்துக்கொண்டிருந்த நடிகர்களே இயக்குனரிடம் வினவ, “எனக்கும் உங்களை போல ஒன்றுமே புரியவில்லை” என கூறி சென்றுள்ளார்.

பிறகு தான் நடிகர் நடிகைகளுக்கு புரிந்துள்ளது, இது தான் கடைசி நாள் ஷூட்டிங் என்றும் இத்துடன் இந்த தொடர் முடியப்போகிறது என்றும். உண்மையில் பிரச்சனை என்னவென்றால் கடந்த சில மாதங்களாகவே நடிக்கும் சில நடிகர்களுக்கும், சில டெக்னிசியன்களுக்கும் சம்பள பாக்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் பிரெச்சனைக்கு உள்ளன தயாரிப்பு நிறுவனம் உடனே இந்த தொடரை முடிவிற்கு வந்து இந்த செயலை யாருக்கும் சொல்லாமலேயே முடித்துள்ளது.

மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நடிக்கும் நடிகர்களுக்கும் இவ்வாறாக சர்ப்ரேஸ் கொடுத்து முடித்த தயாரிப்பு நிறுவனத்தை எண்ணி நடிகர்களே சிலர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்