தலைநகரம் 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி. இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர் சி. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தலைநகரம் என்னும் படத்தில் மூலமாக கதாநாயகன் ஆகவும் அறிமுகமானார். இயக்குனர் சுராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் நாய் சேகர் காமெடிகள் முகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. இன்றுவரை பேசப்படும் காமெடியாகவும் இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டாவது பாகம் வெளியாகும் என்று சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் சுந்தர் சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே படம் பூஜையுடன் தொடங்கியது. இதிலும் சுந்தர் சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை வி.இசட்.துரை இயக்கி வருகிறார். இயக்குனர் துரை ஏற்கனவே அஜீத்தின் முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா, பரத்தின் நேபாளி போன்ற பல படங்களை இயக்கியவர். எனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் அண்மையில் நிறைவு பெற்றுள்ளது. நேற்று இந்த படத்தின. டீசர் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அந்த போஸ்டரை படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். தற்போது படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து பாலக் லால்வாணி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் டீசரை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video.!
Youtube Video Code Embed Credits: Saregama Tamil