பிக்பாஸ் பிரபலத்தை கரம்பிடித்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் ஹீரோயின் தேஜஸ்வினி

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பிரபலம். இவர்கள் பின்னர் வெள்ளித்திரைகளில் சென்று ஜொலிக்கும் நிகழ்வுகளும் உண்டு. அதுபோலத்தான் காமெடி நடிகர் சந்தானமும், தற்போது தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் ஆகியோர் விஜய் டிவியில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஆரம்பித்து இன்று மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ளனர். தற்போது ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் பின்னி எடுத்து வருகிறது விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியல் நடிகை தான் நடிகை தேஜஸ்வினி கவுடா. இவருக்கும் மற்றொரு தொலைக்காட்சியின் நடிகருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் பிரபலத்தை கரம்பிடித்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் ஹீரோயின் தேஜஸ்வினி 1

சின்னத்திரை நடிகை தேஜஸ்வினி கௌடா, விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் தமிழில்அறிமுகமானார். இந்த தொடரில் நடிகர் வினோத் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். இவர் ஏற்கனவே தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 2018 ஆம் ஆண்டு வீணா பொன்னப்பாவுடன் பில் ஹிந்தி என்கிற கன்னட சீரியல் மூலமாகத்தான் முதன் முதலில் தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரி நானும் என்ற தொடரில் நடித்த பின்பு இவர் மிகவும் பிரபலமானார். இந்த சீரியல் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் விஜய் டிவியின் சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு மாறினார் தேஜஸ்வினி.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் ஒன் என்ற சீரியலில் நடித்து வருகிறார் தேஜஸ்வினி. பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத ஒரு பெண் எவ்வாறு தனது புத்திசாலித்தனத்தால் என்னென்ன செய்கிறார் என்பது குறித்த கதை தான் வித்யா நம்பர் ஒன். இந்த நிலையில் இன்று அவருக்கும் கன்னட பிக்பாஸில் கலந்து கொண்ட அமர்தீப் சௌத்திரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்