எழுத்தாளர் அமரர், கல்கியின் கைவண்ணத்தில் உருவான தமிழில் மிகப்பெரிய நாவல் தான் பொன்னியின் செல்வன். இது மொத்தம் ஐந்து பாகமாக வெளிவந்துள்ளது. இந்த கதையை முதலில் கல்கி ஒரு வார இதழில் எழுதி வந்தார். பின்னாளில் இது ஒன்றாக சேர்க்கப்பட்டு மிகப்பெரிய நாவலாக ஐந்து பாகங்களாக வெளிவந்தது. இந்த நாவலை படிக்காத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைவரிடத்திலும் பிரபலம். சோழர்களின் வரலாற்றை சில கற்பனை கதாபாத்திரங்களுடன் இணைத்து மிக சுவாரசியமாக எழுதி இருப்பார் கல்கி. இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்று பலர் எண்ணியிருந்த நிலையில் அந்த கனவை நிறைவேற்றி காட்டியுள்ளார் மணிரத்தினம். இந்தப் படம் தன்னுடைய 40 ஆண்டுகால கனவு என்றும் அது தற்போது நிறைவேறியதில் மகிழ்ச்சி என்றும் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்தினம் பேசியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஜூலை 8 அன்று படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இன்று வரை 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. படத்தில் விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார் பிரகாஷ்ராஜ், பார்த்திபன் போன்ற பலர் நடித்துள்ளனர். போர் காட்சிகள், குந்தவை மற்றும் நந்தினி சந்திப்பு, ஆதித்த கரிகாலனான விக்ரமின் காட்சிகள் என்று டீசரிலேயே மிக பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் மணிரத்தினம். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.!

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஏ.ஆர்.ரகுமான் குரலில் பொன்னி நதி என்ற படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இருந்தது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. வந்தியத்தேவன் ஆடித்திருநாளில் சோழ நாட்டிற்க்கு வரும் காட்சியை இந்த பாடல் விவரித்தது. தற்போது அந்த பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த பாடல் உருவான விதத்தை கார்த்தி அழகாக எடுத்து கூறுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Tips Tamil