அமீர் வாங்க ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்.! தல அஜித்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட காதல் ஜோடிகள்

சமீப காலமாக அமீர் பாவனி மற்றும் சிபி ஆகியோர் தல அஜித் நடிக்கும் துணிவு படத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. தல அஜித் நடித்த வலிமை படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஆனாலும் வசூலில் குறைவில்லாமல் அள்ளி இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த படம், இந்த வருடம் தான் வெளியானது. கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் தள்ளிக் கொண்டே போனது. வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத காரணத்தினால், மீண்டும் அதே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் கைகோர்த்து இருக்கிறார் நடிகர் அஜித்குமார். எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க, ஏகே 61 என்ற படத்தில் நடிக்க கமிட்டானார். அந்த படத்திற்கு துணிவு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அமீர் வாங்க ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்.! தல அஜித்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட காதல் ஜோடிகள் 1

விளம்பரம்

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், ஒரு சண்டைக் காட்சி மட்டுமே மீதி இருப்பதால் அதை எடுக்க தாய்லாந்து வரை படக் குழு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதற்கு முன்பாக அஜித் காஷ்மீர், லடாக் பகுதிகளில் பைக் ரைடு சென்றிருந்தார். தற்போது மீண்டும் திரும்பி உள்ள அவர், படப் பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படம் பொங்கலுக்கு தளபதியின் விஜய் நடிக்கும் வாரிசுடன் மோத இருப்பதாகவும் தெரிகிறது் இந்த நிலையில் பிக்பாஸில் கலந்துகொண்டு புகழ்பெற்றவர்களான அமீர், பாவனி, சிபி ஆகியோர் தல அஜித் உடன் இணைந்து “துணிவு” படத்தில் நடித்து வருவதாக புகைப்படங்கள் வெளியானது. ஆனால் அதன் உண்மை தன்மையை குறித்து இவ்வளவு நாள் தெரியாமல் இருந்தது.

தொடர்புடையவை  அலப்பறை செய்யும் வடிவேலு...தாங்கமுடியாமல் சிரிக்கும் ராகவா லாரன்ஸ்"!!"சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்"

அமீர் வாங்க ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்.! தல அஜித்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட காதல் ஜோடிகள் 3

விளம்பரம்

தற்போது அமீர், பாவனி, சிபி ஆகிய மூவரும் தல அஜித் உடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தை தல அஜித்தே செல்பியில் எடுத்திருக்கிறார் பக்கத்தில் அமீரும் பாவனியும் அமர்ந்திருக்கின்றனர் இந்த புகைப்படத்தை பலரும் தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நிகழ்ச்சியின் போது அமீர், நானும் பாவனியும் ஒரு படத்தில் நடித்து வருகிறோம் என்று கூறியிருந்தார். முதல் படமே மிகப்பெரிய ஸ்டார் ஆன தல படத்தில் இருவரும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Mithran

விளம்பரம்

Leave a Comment