மைக் மோகன் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார். அவர் நடிக்கும் “ஹரா” என்கிற படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘காயா மூயா” என்ற பாடலை தற்போது வெளியிட்டு இருக்கிறது படக்குழு. 1977 ஆம் ஆண்டு கன்னட படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தவர் மைக் மோகன். இவர் 80களில் ரஜினி, கமல் என இரு துருவங்கள் கோலோச்சிய காலத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்து படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். 1980 ஆம் ஆண்டு வெளியான மூடுபனி என்ற படத்தில் மூலமாக இவர் கதாநாயகனாக அறிமுகமானார். அன்று தொடங்கி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டும் எண்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார். எண்பதுகளில் நடிகர் மோகன் வெள்ளிவிழா நாயகனாக அறியப்பட்டார். ஏனென்றால் இவரது படங்கள் அனைத்துமே வெள்ளி விழா காணும் அளவிற்கு மிக வெற்றிகரமாக ஓடியது. மேலும் இவர் மேடைப் பாடகராக பல படங்களின் நடித்திருக்கிறார். இதனால் இவரை மைக் மோகன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதுமட்டுமில்லாமல் இவரின் பாடல்கள் காலத்தால் அழியாதவை. மெலடி பாடல்கள் ஆக இருக்கும் இந்த பாடல்களுக்கு இன்றளவும் உயிர்ப்புடனே இருக்கின்றன.

இந்த நிலையில் வெகு நாட்களுக்குப் பிறகு மோகன் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளார். ஹரா என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த வயதிலும் ஆக்ஷனில் அவர் பின்னி எடுத்திருக்கிறார். குஷ்பூ, யோகி பாபு ஆகியோர் அவருடன் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த பாடலை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Sony Music South