‘திருமகள்’ சீரியல் ஹீரோயினை கரம் பிடிக்கும் ‘சுந்தரி’ சீரியல் நடிகர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

வெளியிட்டது

சின்னத்திரை, வெள்ளித்திரை என எதை எடுத்துக் கொண்டாலும் உடன் நடிக்கும் சக நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. கோலிவுட்டில் பல நடிகர்கள் திருமணம் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக சூர்யா, அஜித் என பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம். அதேபோல் சின்னத்திரையிலும் நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் உடன் நடிக்கும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வந்த ‘சுந்தரி’ சீரியலில் ஹீரோவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் அரவிஷ் சக நடிகையுடன் திருமணம் செய்யப் போவதை உறுதி செய்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'திருமகள்' சீரியல் ஹீரோயினை கரம் பிடிக்கும் 'சுந்தரி' சீரியல் நடிகர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 1

‘சுந்தரி’ சீரியலின் முதல் பாகம் முடிந்த நிலையில் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாம் பாகத்திலும் நடிகர் அரவிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு பிரபல தொடரான ‘திருமகள்’ என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் ஹரிகா என்பவருடன் காதலில் விழுந்துள்ளார். இருவரும் சில நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இத்தனை நாட்களாக தங்கள் காதலை வெளியில் சொல்லாமல் இருந்து வந்த இவர்கள் தற்போது தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர்கள், விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் செய்தியை பகிர்ந்துள்ளனர்.

நிச்சயதார்த்தத்திற்காக அவர்கள் ஷாப்பிங் சென்ற வீடியோவை பகிர்ந்து இந்த செய்தியை அறிவித்துள்ளனர். ரசிகர்கள் பலரும் அரவிஷ் – ஹரிகா ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

Instagram Video Credits: Aravish

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்