‘சுந்தரி’ சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரியல்லா தனது கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களையும், வீட்டில் குடில் வைத்து இருக்கும் வீடியோக்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

டிக்டாக் செயலியின் மூலமாக பிரபலமானவர் கேப்ரியல்லா. தனது தோற்றம் குறித்தும், நிறம் குறித்தும் தொடர்ந்து பலர் கேலி செய்த போதும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
‘எழுதியாச்சு..! படிச்சிடலாமா’ என்று இவர் கவிதை எழுதி வெளியிடும் வீடியோக்கள் மிக வைரலானது. அப்பா – மகன், அம்மா – மகன், அண்ணன் – தங்கை போன்ற உறவுகளை தனது கவிதை மூலம் அழகாக எடுத்துக் கூறியவர் கேப்ரியல்லா. இதனால் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.
இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் பின் தொடர்பவர்களை வைத்து இருக்கிறார் கேபி. பின்னர் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலே மிகப்பெரிய தொலைக்காட்சியான சன் டிவியில் ‘சுந்தரி’ சீரியலில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார்.
இந்த சீரியலில், குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேபி, நிஜத்தில் மிக மார்டன் ஆக இருப்பார். டிக்டாக் செயலி முடங்கிய பிறகு இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் கேப்ரியல்லா. அவ்வபோது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களையும், வீட்டில் குடில் வைத்து இருக்கும் வீடியோக்களையும் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லைக்குகள் குவிந்து வருகிறது.
YouTube Video Embed Code Credits: Viral Videos