என்ன மாதிரி ஆயிடாத இனியா.! இனியாவுக்கு கண்ணீருடன் கடிதம் எழுதிய பாக்கியா.!

விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு விறுவிறுப்பான தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. குறிப்பாக இந்த தொடரின் கதாநாயகி பாக்கியலட்சுமியின் கணவருக்கு இரண்டு மனைவிகள். தற்போது மூத்த மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது மனைவி ராதிகாவுடன் கோபி குடும்பம் நடத்தி வருகிறார். கோபியின் மூத்த மனைவியின் மகளான இனியாவும் தற்போது கோபியுடன் வந்துவிட்டார். ஆனால் இனியாவுக்கு இரண்டாவது மனைவி ராதிகாவை சுத்தமாக பிடிக்கவில்லை. அவருடன் பேசுவதில்லை. ராதிகா சமைக்கும் சாப்பாடுகளும் கூட அவருக்கு பிடிப்பதில்லை. இதனால் இனியாவுக்கும் ராதிகாவிற்கும் எப்போது பார்த்தாலும் சண்டை நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரி ஆயிடாத இனியா.! இனியாவுக்கு கண்ணீருடன் கடிதம் எழுதிய பாக்கியா.! 1

விளம்பரம்

தற்போது கோபியுடன் அவரது அப்பா தாத்தா ராமமூர்த்தியும் கோபியுடனே வசிக்க கிளம்பி வந்து விடுகிறார். ஆனால் ராமமூர்த்தி எப்போதும் ராதிகா வீட்டில் சாப்பிடாமல் எதிர் வீட்டில் இருக்கும் மருமகள் பாக்யா வீட்டில் தான் சாப்பிட்டு வருகிறார். இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக ராமமூர்த்தி தாத்தா தனது ஆட்டத்தை ஆரம்பித்து கோபியிடம் இருந்து ராதிகாவை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எப்போதும் சண்டையாக இருப்பதால் இனியா மற்றும் மயூவால் சரியாக படிக்க முடியவில்லை. இதனால் தேர்வில் குறைவான மதிப்பெண்களை எடுத்துகிறார் இனியா. இதை ராமமூர்த்தி தாத்தா பாக்யவிடம் சென்று கூறுகிறார்.

தொடர்புடையவை  மகளின் பிறந்த நாள்.! இரவு நேர பார்ட்டியில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்த ஆலியா சஞ்சீவ் தம்பதிகள்.!

என்ன மாதிரி ஆயிடாத இனியா.! இனியாவுக்கு கண்ணீருடன் கடிதம் எழுதிய பாக்கியா.! 3

விளம்பரம்

இனியாவை நேராக சந்திக்க முடியாத பாக்கியா கடிதம் ஒன்றை எழுதுகிறார். அதில் படிக்காமல் போனதால் தான் நான் இப்போது பல அவமானங்களை சந்தித்து வருகிறேன். நீயும் அது போல ஆகிவிட கூடாது என்று எழுதுகிறார். இதை பார்த்த பின்பு இனியா மனம் உருகி கதறி அழுகிறார். விரைவில் அவர் தனது அம்மாவை புரிந்து கொண்டு மீண்டும் அவருடன் இணைவார் என்று எதிர்பார்க்கபாடுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment