மயில்கள் போல ஆடிய கயல் சைத்ரா மற்றும் அபிநவ்யா.! அக்காவும் தங்கச்சியும் Cute-ஆ ஆடுறாங்களே.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டியும் அவரது தங்கையாக நடித்து வரும் அபிநவ்யாவும் இணைந்து தற்போது ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு தற்போது ரசிகர்கள் லைக்குகளை வாரி குவித்து வருகின்றனர். சன் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் சின்னத்திரை உலகில் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது கயல் சீரியல் தற்போது இந்த சீரியலின் கதைப்படி கயல் எழிலை திருமணம் செய்து கொள்வாரா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. பல விறுவிறுப்பான கட்டங்களுடன் இந்த சீரியல் நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மயில்கள் போல ஆடிய கயல் சைத்ரா மற்றும் அபிநவ்யா.! அக்காவும் தங்கச்சியும் Cute-ஆ ஆடுறாங்களே.! 1

விளம்பரம்

இந்த சீரியலில் கயல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் கன்னட சீரியல் நடித்து வந்தார். ஆனால் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு சீரியல் என்று சொன்னால் அது யாரடி நீ மோகினி தான். அதன் பின்னர் அவர் தற்போது கயல் என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தந்தையை இழந்த குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் ஒரு குடும்பப் பெண்ணாக அவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் வலிமை படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சைத்ரா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் இன்ஸ்டாகிராமில் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த டிடி.! செம்ம ட்விஸ்ட்.!

மயில்கள் போல ஆடிய கயல் சைத்ரா மற்றும் அபிநவ்யா.! அக்காவும் தங்கச்சியும் Cute-ஆ ஆடுறாங்களே.! 3
அந்த வகையில் அவர் தற்போது சீரியலில் தனது தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் அபிநவ்யாவுடன் இணைந்து ஹிந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் எழிலின் திருமண மண்டபத்தில் நீங்கள் இருவரும் இப்படி ஜாலியாக ஆடிக்கொண்டிருக்கிறீர்களே என்று காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment