சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்று தற்போது திடீரென நிறைவடைய இருக்கிறது. இது அந்த சீரியல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது் 1990களில் தொடங்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான நாடகங்களை வழங்கி வருவதில் முன்னிலை வகிக்கிறது சன் தொலைக்காட்சி. நெடுந்தொடர்கள் என்றாலே சன் தொலைக்காட்சி என்று சொல்லும் அளவிற்கு பல நாடகங்களை ஒளிபரப்பி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. அந்த வரிசையில் வரு நல்ல ஒரு தொடர் தான் கண்ணான கண்ணே. இந்தத் தொடர் தற்போது விரைவில் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் கண்ணான கண்ணே. இது தெலுங்கு மொழி தொடர்பான பௌர்ணமி மற்றும் கன்னட மொழி தொடரான மானசரே ஆகிய இரண்டு தொடர்களின் கதை கருவை வைத்து மறுஆக்கம் செய்யப்பட்ட தொடராகும்.

இந்தத் தொடரில் நடிகர் பப்லு பிருத்திவிராஜ், நிமிஷதா, ராகுல் ரவி, நித்யதாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அம்மா, தங்கை, பாட்டி என அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார் ஹீரோயின் மீரா. ஆனால் இவருக்கு தந்தையின் பாசத்திற்காக ஏங்கி தவிக்கிறார். வீட்டில் எல்லோரும் பாசத்தை கொட்டினாலும் தந்தை பாசம் கிடைக்காமல் மீரா தவித்து வருகிறார். மீராவுக்கு தந்தையின் பாசத்தை காதலன் யுவா கொடுக்க நினைக்கிறார். தந்தையாக இருந்து பார்த்துக் கொள்ள நினைக்கிறார். மீராவிற்கு தந்தையின் பாசம் கிடைக்குமா என்பதுதான் நாடகத்தின் கதை. இதில் கௌதம் மற்றும் கௌசல்யாவிற்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அதனால் பல சிக்கல்கள் உருவாக்கிறது. கௌசல்யா பெண் குழந்தையை பெற்ற பின்பு இறந்து விடுகிறார். மனைவியின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாத கௌதம் தனது குழந்தையை வெறுத்து ஒதுக்குகிறான். அந்த குழந்தை தான் மீரா. தந்தையின் பாசம் கிடைக்காமல் மீரா தவிப்பதற்கு இதுதான் காரணம்.
தற்போது மீராவை தந்தை கௌதம் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் மீரா தந்தையிடமிருந்து விலகிச் செல்கிறார். இப்படியாக கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது கண்ணான கண்ணே சீரியல் தொடங்கி சுமார் 700 எபிசோடுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்தத் தொடர் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த சீரியல் முடியை இருக்கும் செய்தி கேட்டு தற்போது இந்த நாடகத்தின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால் யுவா மற்றும் மீரா இருவரின் கெமிஸ்ட்ரி இந்த நாடகத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். இவர்கள் இருவரின் காதல் காட்சிகளுக்காகவே பலர் இந்த நாடகத்தை விரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். தற்போது இந்த நாடகம் முடிவுக்கு வரும் செய்தி கண்ணான கண்ணே ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.!
Youtube Video Embed Code Credits: Sun TV