“TRP’க்காக சில்லறத்தனமாக இறங்கிய சன் டிவி…..வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்”!!

வெளியிட்டது

"TRP'க்காக சில்லறத்தனமாக இறங்கிய சன் டிவி.....வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்"!! 1

2000ஆம் தொடக்கங்களில் சீரியல்கள் என்றால் அது சன் டிவி தான். சித்தி, மெட்டிஒலி, கோலங்கள், வம்சம், நாதஸ்வரம் என வரிசையான மக்களின் மனம்கவர்ந்த தொடர்கள் பலவற்றை ஒளிபரப்பி வந்து முதல் இடமில்லை, ஒரே இடம் அந்த சேனலுக்கே இருந்தது. சில ஆண்டுகளில் சேனல் எண்ணிக்கைகள் பெறுக பல சேனல்கள் அடுத்தடுத்து தொடர்களை ஒளிபரப்ப துவங்கின.

முன்னணி திரை நாயகிகள் கூட, கொஞ்ச நாட்கள் கழித்து மார்க்கெட் போன பின்னர், சன் டிவி நோக்கி படையெடுத்த காலம் மாறி பலவேறு சேனல்கள் முந்த துவங்கின. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் விஜய் டிவி முழுவதுமாக ஆட்சி புரிய துவங்கியது. இதனால் சன் டிவி கொஞ்சம் சறுக்கலை சந்திக்க துவங்கியது. கொஞ்ச காலம் பொறுத்து, இப்பொது மீண்டும் புது வகையிலான தொடர்களை ஒளிபரப்ப துவங்கியுள்ளது அந்த நிறுவனம்.

இப்பொது சன் டிவியில் மக்களிடம் நல்ல விமர்சங்களை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் கண்ணனே கண்ணே. நடிகர் பாப்லு முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த் தொடரிலில் அப்பா மகள் பாசத்தையும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் பற்றியும் கூறப்பட்டுவருகிறது. எப்போதும் தொடர்கள் என்பது மக்கள் குடும்பத்துடன் இணைந்து பார்க்கும் விஷயங்களாகும்.

இப்பொது TRPக்காக கொஞ்சம் ஒவராகவே சில சீரியல்களில் நெருக்கமான காட்சிகள் வைக்கப்படுகின்றன. அது மக்களின் முகங்களை சுளிக்க வைக்கின்றன. இப்பொது சன் டிவியின் கண்ணனே கண்ணே தொடரிலும் இவ்வாறான ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதனை சன் டிவி நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையிலான மீம்களும், ட்ரோல்களும் செய்து வருகிறார்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்