தனது மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்த ‘சூப்பர் சிங்கர்’ அஜய் கிருஷ்ணா.!

வெளியிட்டது

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு பிரபலமான அஜய் கிருஷ்ணா தனது மகனை முதல் முறையாக ரசிகர்களுக்காக காட்டி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தனது மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்த 'சூப்பர் சிங்கர்' அஜய் கிருஷ்ணா.! 1

அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

எளிய பின்னணியில் இருந்து வரும் பலருக்கும் விஜய் டிவி அங்கீகாரத்தை கொடுத்து வருகிறது. நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுப்பவர்கள் பின்னர் வெள்ளித் திரையில் நட்சத்திரங்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் இன்று ஏ.ஆர் ரகுமான், இளையராஜா, வித்யாசாகர் போன்றோரின் இசைக் குழுவில் பாடத் தொடங்கி தற்போது படங்களில் பின்னணியிலும் பாடி வருகின்றனர்.

அந்த வகையில் புகழை அடைந்துள்ள ஒருவர்தான் அஜய் கிருஷ்ணா. இவர் இரண்டு சீசனுக்கு முன்பு சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டார். அனைவரும் பேசுவதில் தான் மிமிக்ரி செய்ய முடியும்.

ஆனால் பாடுவதையே மிமிக்ரி செய்ததன் மூலமாக மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் அஜய் கிருஷ்ணா. உதித் நாராயணன் போலவே பல பாடல்களை பாடி மிமிக்ரி செய்து இருக்கிறார்.

இவரின் திறமையை எஸ்பிபி, சித்ரா போன்ற பிரபலங்கள் வியந்து பாராட்டி இருக்கின்றனர். அஜய் கிருஷ்ணா தற்போது சில நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பாடி வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு ஜெஸ்ஸி என்பவருடன் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. தனது மகனுக்கு ‘அயான்’ என்று பெயர் வைத்திருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது மகனை முதல் முறையாக ரசிகர்களுக்காக காட்டி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்