இந்த டூப்ளிகேட் காதலுக்கு என்ன ஏன்டா பேச வைக்குறீங்க.! DJ பிளாக் பூஜாவை பங்கம் செய்த TR.!

வெளியிட்டது

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த டி ராஜேந்தர் தற்போது டிஜே பிளாக் மற்றும் பூஜாவை பங்கமாக கலாய்த்து இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல கலைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். பலர் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள். ஜூனியர் சீனியர் என இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மொத்தம் 8 சீசன்களை முடித்து தற்போது ஒன்பதாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனிலும் பல நல்ல பாடகர்கள் பாடி வருகின்றனர். தற்போது டாப் 5 லிஸ்டுக்கு போட்டியாளர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் தொடர்ந்து வைல்டு கார்டு, அரை இறுதி சுற்று, கால் இறுதி சுற்று போன்று போட்டிகள் நடைபெற்று விரைவில் இறுதிச்சுற்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டூப்ளிகேட் காதலுக்கு என்ன ஏன்டா பேச வைக்குறீங்க.! DJ பிளாக் பூஜாவை பங்கம் செய்த TR.! 1
வழக்கம்போல பிரியங்காவும் மாகாபாவும் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், பென்னி தயால் மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அபிஜித், சந்திரன், ஷஷாங்க், அருணா, பூஜா, பிரசன்னா என்று பலரும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கின்றனர் இவர்களில் யார் இறுதி வரை செல்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினர்களாக பாக்யராஜ் மற்றும் டி ராஜேந்தர் இருவரும் வருகை தந்துள்ளனர். அப்போது பூஜா பாடுவதற்கு வரும் பொழுது பூஜாவிற்காக ஸ்பெஷல் பாடல்களை டிஜே பிளாக் ஒலிக்க விடுகிறார். டிஜே பிளாக் எப்பொழுதும் பூஜா வரும்பொழுது எல்லாம் காதல் வசனங்களையும் காதல் பாடல்களையும் ஒலிக்க விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். டிஜே பிளாக்கின் இந்த செயல் பார்ப்பதற்கு மிக காமெடியாகவும் க்யூட் ஆகவும் இருக்கும்.


தற்போது டி ராஜேந்திரன் பூஜாவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வழக்கம் போல டிஜே பிளாக் பின்னணியில் பாடலை ஒலிக்க விடுகிறார். அப்போது பேசிய டி ராஜேந்தர் இந்த டூப்ளிகேட் காதலுக்காக என்னை பாட வைத்து விட்டீர்களே என்று காமெடியாக கலாய்க்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்