விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ சீனியரில் தற்போது இந்த வாரம் பக்தி பாடல்கள் வாரம் நடைபெற இருக்கிறது. இதில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் என்று தமிழின் பின்னணி பாடகர்களாக உயர்ந்திருக்கின்றனர். ஒன்பது சீசன்களை முடித்து தற்போது பத்தாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மனோ, பாடகிகள் சுஜாதா, அனுராதா ஸ்ரீராம், இசையமைப்பாளர் ஷான் ரால்டன் ஆகியோர் பங்கெடுத்திருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான ரவுண்டுகளை ஒளிபரப்பி வரும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக வீரமணி ராஜு, கோவை கமலா, டி.எல் மகாராஜன் ஆகியோர் வருகை தந்திருக்கின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. அதில் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கானா பாடகரான “கானா சேட்டு” என்ற போட்டியாளர் தவித்து வருவதாக கண்ணீருடன் பேசுகிறார்.
மேலும் தனக்கு மகன் பிறந்திருப்பதாகவும் அவரை இனி நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கண் கலங்கி கூறுகிறார். அதைக் கேட்ட நடுவர் மனோ இந்த குழந்தைக்கு இங்கேயே பெயர் வைத்து விடலாம் என்று கூற, தொட்டில் இட்டு, குழந்தைக்கு சீனி தண்ணி கொடுத்து, தீக்ஷன் என்கிற பெயர் வைத்து நடுவர்கள் வெள்ளித்தட்டு தங்க வளையல் போன்ற சீரும் கொடுக்கின்றனர். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television