காதல் திருமணத்தால் பல ஆண்டுகளாக பேசாமல் இருந்த தந்தை.! அழைத்து வந்த சூப்பர் சிங்கர் குழுவினர்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் தற்போது நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்டதால் போட்டியாளரின் தந்தை ஒருவர் பல ஆண்டுகள் பேசாமல் இருந்திருக்கிறார். அவரை தற்போது மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அழைத்து வந்து அவரது மகளுடன் சேர்த்து வைத்துள்ளனர். தந்தை முன்னால் மீண்டும் மகளுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்திருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் திருமணத்தால் பல ஆண்டுகளாக பேசாமல் இருந்த தந்தை.! அழைத்து வந்த சூப்பர் சிங்கர் குழுவினர்.! 1
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றில் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீசன் 10-ஐ ஒளிபரப்பி வருகிறது. இதில் பல போட்டியாளர்கள் பாடி வருகின்றனர். அதில் லின்சி என்ற போட்டியாளர், “ தனது தந்தை பல ஆண்டுகளாக தன்னுடன் பேசவில்லை” என்று கூறி கண்கலங்குகிறார். அந்த போட்டியாளரின் தந்தையை சர்ப்ரைஸாக தற்போது சூப்பர் சிங்கர் குழுவினர் அழைத்து வந்துள்ளனர்.


காதல் திருமணம் செய்து கொண்டதால் பல ஆண்டுகள் பேசாமல் இருந்த நிலையில் தந்தையை பார்த்ததும் போட்டியாளர் கண்கலங்கி அழுகிறார். மேலும் ஓடிச்சென்று தந்தையை கட்டி அணைத்து கொள்கிறார். அவரது தந்தைக்கு முன்பாகவே தற்போது மீண்டும் அந்த ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. நீங்களும் அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்