உங்கள காயப்படுத்தி இருந்தா Sorry..! DJ பிளாக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மன்னிப்பு கேட்ட பூஜா..!

வெளியிட்டது

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாங்கள் DJ பிளாக்கை பிராங்க் செய்திருந்தோம். இந்த பிராங்க்கை நீங்கள் அனைவரும் விரும்பி இருப்பீர்கள் என்று தெரிகிறது. அப்படி இல்லை என்றால். அதற்காக சாரி என்று சூப்பர் சிங்கர் சீசன் 9 இன் போட்டியாளர் பூஜா தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர் என்கிற பாட்டு நிகழ்ச்சி. இது 8 பருவங்களை முடித்து தற்போது ஒன்பதாவது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனும் வழக்கம்போல வெற்றிகரமாக நடந்து வருகிறது. பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், பென்னி தயால், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் இந்த போட்டியில் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர் தமிழகத்தில் இருக்கும் பெருவாரியான மக்களும், முன்னணி பாடகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள காயப்படுத்தி இருந்தா Sorry..! DJ பிளாக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மன்னிப்பு கேட்ட பூஜா..! 1

விஜய் டிவியின் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றிகரமாக செல்வதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் டிஜே பிளாக். இவர் ரியாலிட்டி ஷோக்களின் போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பிண்ணனியில் வடிவேலு மற்றும் கவுண்டமணி போன்றவர்களின் குரல்களை ஒலிக்க விட்டு அவர்களை கலாய்ப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். இது ரியாலிட்டி ஷோக்களின் சுவாரசியத்தை இன்னும் அதிகமாக்கியது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரின் பங்கு அளப்பரியது. அந்த நிகழ்ச்சி இவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று சொன்னால் அதற்கு முக்கிய காரணம் டிஜே பிளாக் என்றும் கூறலாம். அதேபோல் சூப்பர் சிந்த நிகழ்ச்சியிலும் டிஜே பிளாக் போட்டியாளராக இருக்கும் பூஜா வரும்போது அவருக்கு ஏற்றார் போல பின்னணியில் பிக்கப் லைன்களை போடுவார். இது பார்ப்பதற்கே மிக க்யூட்டாக இருந்தது. பலரும் அதை கட் செய்து youtubeல் வீடியோக்களாக போட்டு வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பூஜாவின் வீட்டில் இருந்து அவரது பெற்றோர்கள் வந்திருந்தனர்.


இப்போது பூஜாவின் பெரியம்மா யூடியூப் ஐ தொறந்தாலே சூப்பர் சிங்கர் பூஜா என்று போட்டாலே டிஜே பிளாக் பூஜா என்று தான் வருகிறது. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கிறது, ஒரு பெண் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் டிஜே பிளாக்கிடம் கடுமையாக பேசினார். இதனால் டிஜே பிளாக் மற்றும் நடுவர்கள் உட்பட அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். ஆனால் இறுதியில் அது பிராங்க் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் டிஜே பிளாக் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பூஜா நாங்கள் டிஜே பிளாக்கை பிராங்க் செய்திருந்தோம். அந்த பிராங்க் உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் அதை என்ஜாய் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் யாருக்காவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பகிர்ந்திருக்கிறார். சிலர் டிஜே பிளாக்கும் பூஜாவும் உண்மையிலேயே காதலிக்கிறார்களா? என்று கமெண்டில் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்