Categories: சினிமா

ஹீரோயினாக அவதாரம் எடுத்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.! படத்தின் First Look போஸ்டர் இதோ.!

வெளியிட்டது

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி ஜோடி. தற்போது செந்தில் கணேஷ் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் நிலையில், ராஜலட்சுமியும் ஒரு படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கணவன் மனைவியாக கலந்து கொண்டவர் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் நாட்டுப்புற பாடல்களை பாடியதன் மூலமாக மிகப் பிரபலமானார்கள். நாட்டுப்புறக் கலையை பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இவர்கள் பல மேடை கச்சேரிகளை நடத்தி வந்தனர். இவர்களுக்கு அரிய வாய்ப்பாக கிடைத்தது தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவருமே பங்கேற்றார்கள்.

ஹீரோயினாக அவதாரம் எடுத்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.! படத்தின் First Look போஸ்டர் இதோ.! 1

இவர்கள் கலந்து கொண்ட சீசனில் வெற்றியாளராக செந்தில் கணேஷ் வந்தார். ஆனால் ராஜலட்சுமியால் ஜெயிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் ராஜலட்சுமிக்கு பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக புஷ்பா படத்திலிருந்து வாயா சாமி என்ற பாட.டை பாடியதன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் ராஜலட்சுமி. இந்த நிலையில் ராஜலட்சுமி தற்போது புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். கணபதி பாலமுருகன் என்ற இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ராதாரவி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு லைசன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நார்மல் ஃபிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் என்பவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் முழு காலர் ஜாக்கெட் அணிந்து பின்னால் கரும்பலகையுடன் ராஜலக்ஷ்மி நிற்பது போன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்தால் ராஜலட்சுமி ஆசிரியராக இந்த படத்தில் நடிக்கிறார் என்று தெரிகிறது. ராஜலக்ஷ்மிக்கு தற்போது அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்