Categories: சினிமா

படத்துலயும், சுடுகாட்டுல மட்டும் தான் ஜாதி இல்லனு நெனச்சேன்,ஆனா அப்படி இல்லனு இந்த படம் கட்டிருச்சு!!!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கு ரசிகர்களிடம் அறிமுகத்தை கொடுத்தது. அதில் மிகவும் முக்கியமானவர் சுரேஷ் சக்ரவர்த்தி. நடிகராக பல காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் காலமது கொண்ட பிறகு மிகவும் பிரபலம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படத்துலயும், சுடுகாட்டுல மட்டும் தான் ஜாதி இல்லனு நெனச்சேன்,ஆனா அப்படி இல்லனு இந்த படம் கட்டிருச்சு!!! 1

நடிப்பது மட்டுமின்றி இவர் பிரபல சமையல் கலை வல்லுனரும் கூட. சில படங்களில் இவர் தலைக்காட்டி இருந்தாலும் அது அவர்க்கு எந்த வகையிலும் உதவிடவில்லை. ஆனால் பிக் பாஸ் பிறகு இப்பொது தமிழில் வெளியாகியிருக்கும் மிக பெரிய படமான “நெஞ்சுக்கு நீதி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்,தான்யா, ஷிவானி ராஜசேகர், ஆரி என பலர் நடிப்பில் ஜாதி கொடுமைகளை தோலுரித்து காட்டும் படமாக இன்று வெளியாகி உள்ள “நெஞ்சுக்கு நீதி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

படத்தின் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொது இந்த படம் குறித்த தன்னுடைய அனுபவங்களை அவர் தனியார் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

“நான் முதலில் படங்களிலும்,சுடுகாட்டிலும் மட்டும் தா ஜாதி இல்லை என்று நினைத்து இருந்தேன், ஆனால் அப்படி இல்லை என இந்த படத்தில் எனக்கு காட்டியுள்ளனர், என உதயநிதி ஸ்டாலின், அருண்ராஜா காமராஜா என பலரை பற்றி பேசியுள்ளார்.

படத்தில் அவருடைய நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து சில படங்களிலும் அவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Video Courtesy – CineUlagam

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்