தினம் தினமும் உன் நினைப்பு..! இளையராஜா குரலில் விடுதலை 2 முதல் பாடல் வெளியாகியது..!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் விடுதலை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியாகதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படம் மாபெரும் வெற்றியினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்து இருந்தது.

தினம் தினமும் உன் நினைப்பு..! இளையராஜா குரலில் விடுதலை 2 முதல் பாடல் வெளியாகியது..! 1

விளம்பரம்

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து உள்ளது. எப்பொழுது இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஏற்கனவே நடிகர் சூரி இந்த ஆண்டு விடுதலை 2 வெளியாகும் என பேட்டிகளில் கூறி இருந்தார். அதன்படி தற்போது இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக படகுழு அறிவித்துள்ளது.

தினம் தினமும் உன் நினைப்பு..! இளையராஜா குரலில் விடுதலை 2 முதல் பாடல் வெளியாகியது..! 3

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது . இப்பாடலை இளையராஜாவே பாடியுள்ளார். ரசிகர்களிடம் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று உள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

விளம்பரம்

Leave a Comment