Categories: சினிமா

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சூரி!

வெளியிட்டது
ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சூரி! 1

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது தர்பார். போலீஸ் ஸ்டோரியை மைய கதையாக கொண்டு இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 168 ஆவது படத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இமான் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், கீர்த்தி சுரேஷ்க்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தலைவர் 168 படத்தில் ரஜினியுடன் இணைந்து சூரியும் நடிக்க இருக்கிறார் என்று புதிய தகவல் வந்துள்ளது.

இதற்கு முன்னதாக ரஜினியுடன் இணைந்து வடிவேலு, சந்தானம், விவேக் ஆகிய காமெடி நடிகர்கள் நடித்துள்ள நிலையில், தற்போது சூரியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்