தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் 6 ஆவது முறையாக விஜய்யின் படம் பிகில்!!

தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் 6 ஆவது முறையாக விஜய்யின் படம் பிகில்!! 1

விஜய்யின் பிகில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி நாளை திரைக்கு வருகிறது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது .
தற்போது எல்லாம் விளையாட்டு கதைகளை மையப்படுத்தி வரும் படங்களுக்கு ரசிகர்கள் அதிகளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், பிகில் பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி, இப்படமும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 6 ஆவது முறை தீபாவளிக்கு வரும் பிகில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்ப்புகள் அனைவரிடமும் உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் படம் வெளியாகியுள்ளது. 2012ல் துப்பாக்கி. இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. 2014 ஆம் ஆண்டு வந்த கத்தியும் நல்ல வரவேற்பு பெற்றது.

விளம்பரம்
தொடர்புடையவை  தப்பு செஞ்சிட்டு தப்பிக்க முடியாது இர்பான்...! இதை சும்மா விடமாட்டோம்..! அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிரடி..!

இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கி வெளிவந்த மெர்சல் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது. கடந்தாண்டு சர்கார் படம் வெளியானது. வாக்குரிமையை மையப்படுத்திய இப்படம் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. விஜய்யின் ஒவ்வொரு போஸ்டர் வெளியான போதும், அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அதே நிலைதான் பிகில் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. பூ வியாபாரிகள் சங்கம், மீன் வியாபாரிகள் சங்கம் என பிகில் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, தீபாவளி பண்டிகை என்பதால், பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அதிக கட்டணம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, பிகில் உள்பட அனைத்து படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment