
நடிகர் சூர்யா இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வசந்த இயக்கிய, விஜய் நடிப்பில் 1997ஆம் ஆண்டில் வெளியான “நேருக்கு நேர்” படத்தின் மூலம் காதல் நாயகனாக அறிமுகமானார். படம் வெற்றியை பெற்ற போதிலும் சூரியா பெரிதாக கவனிக்கப்படவில்லை. பின்னர் “காதலே நிம்மதி”, “சந்திப்போமா” என சில படங்கள் நடித்தாலும், முதல் வெற்றியாக இவருக்கு அமைந்தது “பூவெல்லாம் கேட்டுப்பார்” படமே. அதே ஆண்டு மீண்டும் ஜோதிகாவுடன் “உயிரிலே கலந்தது” படத்தில் நடித்தார். இரண்டுமே நல்ல வெற்றியை பெற்றது.
மீண்டும் விஜயுடன் ஃப்ரண்டஸ் படத்தில் நடித்தார். இதுவும் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. பின்னர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான “நந்தா” படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. படம் மிக பெரிய வெற்றியை கொடுக்க, அதன் பின் அவர் நடித்த “உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, காக்க காக்க, ஆறு, வேல், ஜில்லுனு ஒரு காதல், பிதாமகன், மாயாவி, கஜினி, வாரணம் ஆயிரம், சிங்கம், சிங்கம் 2, சூரரை போற்று, ஜெய் பீம்” போன்ற பெரிய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை அவர் 4 முறை ஃபிலிம் பேர் அவார்ட் என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார்.
ஜோதிகாவுடன் சூர்யா இணைந்து நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, ஜில்லுனு ஒரு காதல், காக்க காக்க, மாயாவி என நடத்த அனைத்து படங்களும் வெற்றியாக அமைந்துள்ளது. இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் முதலே காதலித்து வந்தனர். பின்னர் பெற்றோர்கள் சமதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருமே கோலிவுட்டின் சிறந்த காதல் தம்பதிகளாக இன்றளவும் இருக்கிறார்கள்.
நீண்ட ஆண்டுகள் முன்பே, அகரம் என்ற பவுண்டேஷனை உருவாக்கி, அதன் மூலம், கல்வி பயில கஷ்டப்பட்டு வரும் ஏழை எளிய குழந்தைகள் பலருக்கும் சொந்த முயற்சியில் கல்வி கொடுத்து வருகிறார். வெளியில் மக்களுக்கு இந்த விஷயம் தெரிந்தாலும் பெரிதாக அதனை பிரபல படுத்திக்கொள்ளும் முனைப்பில் அவர் இல்லை. இவருடைய மனைவி ஜோதிகாவும் அந்த செயலை ஒரு போதும் செய்தது இல்லை.கண்ணிற்கு மறைவாகவே இவர்கள் இருவரும் இந்த நல்ல செயலை செய்து வருகிறார்கள்.
இருவருக்கும் 2 குழந்தைகள் தேவ் மற்றும் தியா என பிள்ளைகள் உள்ளனர். இருவரில் தியா சமீபத்தில் 10ஆம் வகுப்பு முடித்து, நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோரை மிகவும் பெருமை அடைய செய்துள்ளார். தமிழில் 95, ஆங்கிலத்தில் 99 அறிவியலில் 98 மற்றும் சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் அனைவரும் எதிர்பார்த்ததுபோல் கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது மிகவும் வைரலாகியது.
இப்போது இந்த சந்தோசத்தை கொண்டாட நடிகர் சூர்யா குடும்பத்துடன் கோஸ்டா ரிக்கா நாடு காட்டு பகுதியிலுள்ள ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்பொது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த விடியோவை நீங்களும் காண….
Video Courtesy – TrendingMediaTS