Categories: சினிமா

“என்னங்க சொல்றீங்க?”!!நான் மகான் அல்ல படத்துல வர இந்த குழந்தை இப்போ சூர்யாக்கு ஜோடியா?!! யார் அந்த பொண்ணு?

வெளியிட்டது

கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகிய படம் “நான் மகான் அல்ல” திரைப்படம். 2010’இல் வெளியான இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்க இருந்தார். சூரி, விஜய் சேதுபதி, நீலிமா ராணி, பிரியா என பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். நல்ல விமர்சங்களுடன் வெற்றி பெற்ற இந்த படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் விஜய் சேதுபதி தோன்றினார்.

"என்னங்க சொல்றீங்க?"!!நான் மகான் அல்ல படத்துல வர இந்த குழந்தை இப்போ சூர்யாக்கு ஜோடியா?!! யார் அந்த பொண்ணு? 1

பின்னர் அவரே இப்பொது மிக பெரிய நடிகனாக இந்திய முழுவதிலும் கலக்கி வருகிறார். அதே போல இந்த படத்தில் மற்றொரு இப்போதைய முக்கிய நடிகை நடித்துள்ளார். கார்த்தி ஒரு முறை படத்தில் ஷாப்பிங் செல்வர். அப்போது அங்குள்ள ஒரு சிறிய குழந்தையை பார்த்து கண் அடிப்பார்.

இந்த காட்சி படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வரும். படம் வெளியாகி 12 வருடங்கள் கடந்து இப்பொது, இந்த படத்தில் ஒளிந்திருக்கும் அந்த முக்கிய நாயகியை ரசிகர் ஒருவர் கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளார். இது தற்போது வைரலாக உள்ளது.

அந்த குழந்தை நாயகி யார் என பல ரசிகர்களும் தேடி வந்த நிலையில், முதலில் பரப்பியவரே அந்த விஷயத்தை கூறியுள்ளார். அந்த நாயகி தெலுங்கு பட உலகில் இப்பொது சக்கை போடு போட்டு வரும் நடிகையாக உள்ளார். அது மட்டுமின்றி இவர் விரைவில் நடிகர் கார்த்தியின் அண்ணன் சூர்யாவிற்கு நாயகியாக தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.

ஒரேயொரு படத்தில் தென்னிந்திய ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகியாகி உள்ளார் கிருத்தி ஷெட்டி. அந்த குழந்தை அவர் தான் கூறிவருகிறார்கள். தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த ‘உப்பென்னா” என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் அந்த படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பாலும், அழகாலும் பல ரசிகர்களையும் கட்டிபோட்டுள்ளார்.

அதை தொடர்ந்து நடிகர் நானியின் “ஷியாம் சிங்க ராய்” படத்திலும் நடித்து இருந்தார். இவர் இப்பொது தெலுங்கு நடிகர் ராமுடன் “வாரியர்” படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

இந்த புகைப்படம் இப்பொது வைரலாக ரசிகர்கள் பாலரும் இந்த குழந்தை தானா இது, இல்லை சும்மா புரளியை கிளப்பி விட்டுள்ளார்களா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்