கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் எட்டு நாட்கள் ஆகிறது. இருந்த போதிலும் தொடர்ந்து அவரது நினைவிடத்திற்கு பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும், கேப்டனுடைய இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா நேற்று வெளிநாட்டில் இருந்து திரும்பி இருந்த நிலையில் இன்று கேப்டனின் நினைவிடத்திற்கு சென்று தேம்பி தேம்பி அழுதிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. “ஒரு பெரிய தலைவரை இழந்து விட்டோம், கேப்டனின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு” என்று சொல்லி அவர் பேட்டி அளித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திரையுலகம் மற்றும் அரசியல் உலகில் எதிரிகளை சம்பாதித்து வைக்காதவர் கேப்டன் விஜயகாந்த். அவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் குன்கி இருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 28ம் தேதி திடீரென காலமாகி இருந்தார் விஜயகாந்த். அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பேரிழப்பாக அமைந்திருந்தது. பலருக்கும் அன்னமிட்ட அந்த மனிதர் இப்படி மறைந்து விட்டாரே என்று சொல்லி ரசிகர்கள் பலரும் கண்ணீர் வடித்தனர். சுமார் 15 லட்சம் பொதுமக்கள் திரண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்த காரணத்தினால் நடிகர்கள் பலராலும் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத நிலை இருந்தது. எனவே அவர் இறந்து எட்டு நாட்கள் ஆன பின்னும் இன்னும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது.
விஜயகாந்த் நினைவிடம் அமைந்துள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு தொடர்ந்து மக்களும், பிரபலங்களும் வருகை தருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதேபோல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun News