நடிகர் சூர்யா தற்போது தனது 42 வது படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் உலகின் முண்ணனி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார் சூர்யா. அதன்பின்னர் இவர் பிரண்ட்ஸ், நந்தா, காக்க காக்க, மௌனம் பேசியதே, பிதாமகன், சில்லுனு ஒரு காதல், கஜினி, அயன், ஏழாம் அறிவு, சிங்கம் போன்ற பல படங்களின் நடித்திருக்கிறார். மேலும் சமூக அக்கறை கொண்ட படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் சூரரைப் போற்றுப் படத்திற்காக அவருக்கு தேசிய விருதுகளும் கிடைத்து இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சூரரைப் போற்றி ஹிந்தி ரீமேக் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். சூர்யா 42வது படமாக, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பாலாவின் வணங்கான் படத்திலிருந்து சமீபத்தில் விலகி இருந்தார் சூர்யா. தற்போது கைவசம் இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வரலாற்று பின்னணியில் இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ஓடிடி உரிமை 100 கோடிக்கும் அதிகமாக விற்பனையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சூர்யா திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஓடிடி வியாபாரம் கிடைத்திருப்பதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தற்போது சூர்யா 42 படத்திற்கான முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார் சிறுத்தை சிவா. வரலாறு பின்னணி கொண்ட கதை என்பதால் உடலை அதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார் சூர்யா.
படத்தில் இடம்பெற இருக்கும் வரலாற்றுப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாக தெரிகிறது. அதற்காக தனது உடல் அமைப்பை கடுமையான உடற்பயிற்சி மூலமாக மாற்றி வருவதாகவும், விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Vidoes 3.O