Categories: சினிமா

விடுதலை படத்தில் குட்டி பெருமாள் வாத்தியாராக நடிக்கும் விஜய் சேதுபதி மகன்.! இணையத்தில் கசிந்த புகைப்படம்

வெளியிட்டது

சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் விடுதலை படத்தில் தற்போது விஜய் சேதுபதியின் மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் விஜய் சேதுபதியின் மகன். அவருக்கு வெற்றிமாறன் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார், அருகில் விஜய் சேதுபதியும் அமர்ந்து மும்மு்மாக கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற நாவலை கொண்டு அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த திரைப்படம். சூரி கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை குவித்து இருக்கிறது. மேலும் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பையும் பெற்று இருக்கிறது.

விடுதலை படத்தில் குட்டி பெருமாள் வாத்தியாராக நடிக்கும் விஜய் சேதுபதி மகன்.! இணையத்தில் கசிந்த புகைப்படம் 1
அருமபுரி என்கிற கிராமத்து மக்கள் தங்களது கிராமத்தில் சுரங்கம் அமைக்க திட்டமிடும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் தீவிர அமைப்பாக மாறுகிறது் அந்த அமைப்பின் தலைவராக பெருமாள் வாத்தியார் என்பவர் (விஜய் சேதுபதி) இருக்கிறார். இவரை போலீசார் தேடி வரும் நிலையில் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒளிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் போலீசின் சிறப்பு படையில் அதிகாரியாக வந்து சேரும் சூரி, பெருமாள் இருக்கும் இடத்தை பார்த்து விடுகிறார் .பின்னர் போலீசை அழைத்துக்கொண்டு பெருமாளை கைது செய்து வருகிறார் சூரி. இத்துடன் முதல் பாகம் நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகனும் இந்த படத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் சமீப காலமாக வெளியாகி வந்தது. தற்போது அதை உறுதி செய்யும் விதமாக ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.


அதில் விஜய் சேதுபதியின் மகன் அமர்ந்து வெற்றிமாறனிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். மிக சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும் அவர்களின் அருகில் விஜய் சேதுபதியும் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தில் ஆள் வளர்ந்து அடையாளமே தெரியாமல் மாறி போயிருக்கிறார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. இவர் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் மகன் நானும் ரவுடிதான் படத்தில் அவரது மகன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து தற்போது இந்த படத்திலும் நடிக்க இருக்கிறார் சூர்யா சேதுபதி. இந்த புகைப்படத்தை பகிர்ந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலரும் குட்டி வாத்தியார் களத்தில் இறங்கிவிட்டார் என்று பகிர்ந்து வருகின்றனர். பலரும் சூர்யா சேதுபதிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்