நேற்றைய இந்திய சினிமா மாறும் மீடியா தளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்றால் அது லலித் மோடி மற்றும் சுஷ்மிதா சென் புகைப்படங்களே. இந்தியாவில் சினிமா, அரசியல், தொழில்துறை இது மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்ததாகும். ஒன்றின் தாக்கம் மற்றொன்றில் பெரிய அளவில் பிரதிபலிக்கும்.

IPL போட்டியின் கண்டுபிடிப்பாளர், முதல் சேர்மன் என பல பொறுப்புகளில் 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்திய அளவில் மிக பெரிய பிசினஸ்மேனாக இருந்த லலித் 2010ஆம் ஆண்டு கொச்சி ஐபிஎல் அணி கொடுத்த புகாரின் காரணமாக BCCI’யால் பதவிகளில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதே ஆண்டே IPL போட்டிகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல் விவகாரங்களில் விசாரிக்கப்பட்டு, இப்பொது நாடு தப்பி சென்று லண்டனில் வாழ்ந்து வருகிறார். இப்போதும் இவர் தான் கோத்ரெஜ் பிலிப்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ஆவர். இப்பொது இவர் லண்டனில் வசித்து வருகிறார்.
1994ஆம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் இந்திய சார்பில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். முதல் முறை ஒரு இந்திய பெண் அந்த பட்டத்தை வென்றவரும் இவரே. பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும், சுஷ்மிதா நடிகையாக மாறினார். இவரது முதல் படமான தஸ்தக் , 1996ம் ஆண்டு வெளியானது. தமிழ் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான “ரட்சகன்” படத்தில் நடித்ததன் மூலம் இங்கும் மிக பிரபலமானார். பின்னர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு முக்கியாமாக நிறைய ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.
46 வயதுக்கும் சுஷ்மிதா சென் இதுவரையில் திருமண செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென், ரோஹ்மன் ஷால் என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார். அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரிந்தனர். தற்போது இருவரும் டேட்டிங் செய்து வருவதாக லலித் மோடி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்று இட்டுள்ளார்.
மாலத்தீவு உள்ளிட்ட உலகச் சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியிருப்பதாக கூறியுள்ளார். என்னுடைய காதலி சுஷ்மிதா செனுடன் சென்றிருந்தேன் எனத் தெரிவித்துள்ள அவர், புதிய வாழ்க்கை புதிய பயணம் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார். அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு டிவீட்டில், இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். ஒருநாள் அதுவும் நடக்கும் என கூறியிருக்கிறார்.
மினால் என்பவரை 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இருவருக்கும் இடையிலான திருமண வாழ்க்கை 2018 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
நேற்றைய தினம் இந்த செய்தியே மிக பெரிய அளவில் வைரலான நிலையில், இப்பொது இது குறித்து பதில் அளித்துள்ளார் நடிகை சுஷ்மிதா சென். தன்னுடைய இரண்டு வளர்ப்பு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்நது, “கையில் மோதிரமும் இல்லை, திருமணமும் இல்லை, போய் உங்களுடைய வேலையும், வாழ்க்கையும் பாருங்க, புரளிகளுக்கு பதில் அளித்து நான் சோர்வாகிவிட்டேன்” என பதிவிட்டுள்ளார் அவர். இதனால் நேற்று வெளியான புகைப்படங்கள் நிஜம் என்றாலும், அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் பொய் என்றே தெரிகிறது. இந்த போஸ்ட் இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.