விஜய் சேதுபதி மற்றும் மாதவனின் நடிப்பில் வெளியான படம் “விக்ரம் வேதா”. வழக்கம்போல போலீஸ் திருடன் கதையாக இருந்தாலும், புஷ்கர் காயத்ரி இயக்குனர்கள் அதனை வேறு ஒரு கோணத்தில் படமாக்கி படம் பார்த்தவர்களை மிரட்டினார். நடிப்பில், எழுத்திலும், இயக்கத்திலும் சிறப்பான வெளியான இது மிக பெரிய வெற்றியை பெற்றது.

இப்பொது இதே படம் ஹிந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலி கான் நடிப்பில் ரீமேக் ஆகிவருகிறது. இந்த படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு, இயக்குனர் இணை புஷ்கர் மற்றும் காயத்ரி அடுத்த படத்தை ஒரு வெப்செரியஸாக எடுத்து முடித்துள்ளனர்.
இந்தியாவில் பல வெளிநாட்டு வெப்செரிஸ்க்கள் வெற்றி பெற்றதால் இப்பொது அமேசான் நிறுவனம் தன்னுடைய “ott” தளத்தில் அவ்வாறான ஒரு படைப்புதான் வருகிறது. விக்ரம் வேத இயக்குனர்கள் இயக்கத்தில் 5 மொழிகளில் இந்த தொடர் வெளியாக உள்ளது.
“பரியேறும் பெருமாள்” புகழ் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிப்பில் மிக வித்தியாசமாக இது உருவாகி இருக்கிறது, தன்னுடைய ஒவ்வொரு பதிப்பிலும் சிறந்த வெளிப்படுதத்தலை எதிர்பார்க்கும் பார்த்திபன் இதில் உள்ளதால் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது.
படத்தின் டீஸர் இப்பொது வெளியிடப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 17ஆம் தேதி இந்த தொடர் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. வழக்கமான படங்களிலும், தொடர்களிலும் இருந்து புதுமையை எதிர்பார்க்கும் ரசிகர்கள் பலரும் இதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
தொடரின் டீசரில் ஒவ்வொரு நடிகர் ஒரு சூழலில் மாட்டி வேறொரு நடிகராக முறையே கதிர், ஐஸ்வர்யா, ஸ்ரேயா மற்றும் பார்த்திபன் வருகிறார்கள். மாறுதலான கதைக்களத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக தொடரின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்வத்தை தூண்டும் அந்த டீசரை நீங்கள் காண கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
video courtesy – amazon prime video