Categories: சினிமா

சித்தார்த் நடித்த டக்கர் படத்திலிருந்து “நிரா நிரா பாடலின் முழு வீடியோ பாடல் வெளியானது.!

வெளியிட்டது

நடிகர் சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான டக்கர் திரைப்படத்தில் இடம்பெற்ற “நிரா நிரா” பாடலின் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த பாடலின் வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சித்தார்த். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமான இவர், அதன் பின்னர் ஆயுத எழுத்து, 180, உதயம் என்ஹெச் 4, தீயா வேல செய்யணும் குமாரு, அவள், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் போன்ற பல நல்ல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சித்தார்த் நடித்த டக்கர் படத்திலிருந்து "நிரா நிரா பாடலின் முழு வீடியோ பாடல் வெளியானது.! 1

தற்போது கைவசம் இந்தியன் 2, சித்தா, டெஸ்ட் ஆகிய 3 படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பிண்ணனி பேசுபவராகவும், பிண்ணனி பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டக்கர். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக திவ்யன்ஷா நடித்திருந்தார். இந்த படத்தை கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி. க்ருஷ் இயக்கி இருந்தார். நிவாஸ் பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். காதல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என கலவையாக இந்த படம் உருவாகி இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் நிரா நிரா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது இதன் முழு வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்